மேற்கு வங்கத்தில் போலிச் செய்திகளை பரப்பியதற்காக பாஜக IT பிரிவு செயலாளர் கைது

0

பாஜக வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் தருண் சென்குப்தாவை அவர் போலியான செய்திகளை பரப்பி சமூக நல்லிணக்கத்திற்கு கேடு  விளைவிப்பதாக கூறி மேற்கு வங்க காவல்துறை கைது செய்துள்ளது.

IPS  அதிகாரி ஒருவர் ஒரு நபரை கடுமையாக தாக்குவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்ட தருண் சென்குப்தா, அந்த நிகழ்வு இவ்வருடம் ஏப்ரல் மாதம் ஹனுமான் ஜெயந்தி அன்று நடைபெற்றது என்று கூறி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

சமீபகாலாமாக மேற்கு வங்கத்தை மையப்படுத்தி பல போலியான செய்திகள் சமுக வலைதளங்களில் பரவ விடப்படுகிறது. அதில் பல கோரமான புகைப்படங்களை பதிவு செய்து அவை மேற்கு வாங்க இந்துக்கள் என்றும் அவர்கள் மாநில அரசு ஆதரவுடன் முஸ்லிம்களால் கொலை செய்யப்படுகின்றனர் என்று கூறி பல இந்துத்வாவாதிகளால் திட்டமிடப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது. இது மேற்கு வங்க மக்களை எப்படியேனும் பிளவு படுத்தி அதன் மூலம் தேர்தலில் ஆதாயம் தேட நினைக்கும் பாஜகவின் சதி என்று கூறப்படுகிறது.

தருண் சென்குப்தா கைது செய்யப்பட்டது போன்றே பாஜக வின் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அவர் குஜராத் இனப்படுகொலை புகைப்படங்களை மேற்கு வங்க வன்முறையின் போது நடைபெற்றது என்றும் அதில் பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்கள் என்றும் கூறி அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்த காரணத்தினால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் 17 வயது சிறுவன் ஒருவன் முஹம்மத் நபி குறித்து மோசமாக சித்தரிக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்த காரணத்தினால் அங்கு பெரும் பதற்றம் ஏற்ப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.