மேற்கு வங்கத்தில் வசிப்பவர்கள் பெங்காலியில்தான் பேச வேண்டும்: மம்தா அதிரடி

0

மேற்குவங்க மாநிலத்தில் வசிக்கும் மற்ற மாநிலத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் யாரானலும் பெங்காலி கற்றுக்கொண்டு பெங்காலியில்தான் பேச வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, “நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திர மோசடி மூலம் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்று கூறினார். இதன் மூலம் பெங்காலிகள் மற்றும் சிறுபான்மையின மக்களை தாக்கலாம் என பாஜக நினைத்துக் கொண்டுள்ளது. ஆனால், அதனை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். கலவரத்தை ஏற்படுத்திய குண்டர்களுக்கு எதிராக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும். மேற்கு வங்கத்தில் வசிப்பவர்கள் ஆணோ அல்லது பெண்ணோ அவர்கள் பெங்காலியில் பேச கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Comments are closed.