மேற்கு வங்கம்: பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தலைவர் ராஜினாமா

0

மேற்கு வங்கம் பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தலைவர் ஷகீல் அன்சாரி கட்சியில் இருந்து விலகி திரினாமுல் காங்கிரஸ் கட்சில் சேரவிருக்கிறார். சட்டசபை தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில் ஷகீல் அன்சாரியின் இந்த முடிவு பா.ஜ.க. வின் தேர்தல் முடிவை கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

பா.ஜ.க. மாநில கட்சி தலைமையகத்திற்கு கடிதம் எழுதிய அவர் தான் கட்சியின் அனைத்து பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடிதத்தில் தான் கட்சியில் சேர்வதற்கு முன்பு கண்ட கொள்கைகள் எதையும் தற்பொழுது காணவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் தொண்டர்களின் பணிகளை சரியாக மதிப்பிடுவதில்லை என்றும் தகுதியில்லாதவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்றும் கட்சி பணத்திற்காக விற்கப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். சிறுபான்மை சமூகத்தின் மக்கள் பா.ஜ.க.வில் வெறும் பார்வைக்காகவே வைக்கப்பட்டுள்ளனர் என்றும் வேட்பாளர்களை அறிவித்துள்ள 52 தொகுதிகளில் சிறுபான்மை சமூக மக்களுக்கு ஒரு இடம் கூட கொடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஷகீல் அன்சாரியுடன் இன்னும் 100 பேர் திரினாமுல் காங்கிரசில் இணையப்போவதாக செய்திகள் தெரிவிகின்றன. இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் திலிப் கோஷ், தன்னுடைய பார்வைக்கு எந்த ஒரு கடிதமும் வரவில்லை என்றும் ஆனால் சில நாட்களாக அன்சாரி தனது அதிருப்தியை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றார் எனவும் கூறியுள்ளார்.

வரும் தேர்தலில் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க தடம் பதிக்க வேண்டும் என்றால் அது முஸ்லிம் வாக்காளர்களை கருத்தில் கொண்டே ஆக வேண்டும். மேற்கு வங்கத்தின் மொத்த ஜனத்தொகையில் 28% ல் இருந்து 30% முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.