மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் மனிஷ் ஷர்மா கைது: 33 லட்சம் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் பறிமுதல்

0

2016 ராணிகஞ் பகுதியில் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க சார்பாக போட்டியிட்ட மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் மனிஷ் ஷர்மாவை கோல்கத்தா சிறப்பு காவல் படை ஹவாலா குற்றத்திற்காக கைது செய்துள்ளது. அவரிடம் இருந்து 33 லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை காவல்துறை சிறப்பு படை கைப்பற்றியுள்ளது. மேலும் இவருடன் நிழலுலக நிலக்கரி சுரங்க கும்பலை சார்ந்த பலரையும் காவல்துறை கைது செய்துள்ளது.

மனிஷ் ஷர்மா 2016 சட்டமன்ற தேர்தலில் 18% வாக்குகள் பெற்று தோல்வியுற்றார். இவர் தேதலில் போட்டியிடுவதற்கு முன்னர் பா.ஜ.க சிறுபான்மைப் பிரிவு மாநில தலைவரான ஷகீல் அன்சாரி, மனிஷ் சர்மாவிடம் பண பலம் இருப்பதாலேயே அவர் அந்த தொகுதியில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறியிருந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், “மனிஷ் செல்வந்தர். நான் அவ்வாறு இல்லை. ராகுல் சின்ஹா கட்சி தலைவராக இருந்த காலத்தில் உள்ள பழக்கம் திலிப் கோஷ் காலத்திலும் தொடர்கிறது. எனக்கும் பரம்பரை சொத்துக்கள் இருந்திருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. அப்படி இருந்திருந்தால் நானும் அதிக பணம் கொடுத்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றிருப்பேன்” என்று கூறியிருந்தார்.

மனிஷ் ஷர்மாவைப் போன்றே சேலத்தை சேர்ந்த பா.ஜ.க இளைஞரணித் தலைவர் அருண் ராம் என்பவரிடம் இருந்து 20.55 லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை காவல்துறையினர் கைப்பற்றினர். இவர் சமூக வலைதளங்களில் மோடியின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் நன்மைக்காக மக்கள் வங்கியின் முன் 2000 ரூபாய்க்கு நிற்பது தவறில்லை என்பது போன்ற கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தவர்.  இவரிடம் இருந்து 926 புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர். வழக்கமான வாகனச் சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமாக சென்ற இவரது வாகனத்தை காவல்துறையினர் சோதனையிட்டனர். அதில் இந்த பணம் சிக்கியது. (பார்க்க செய்தி)

நாட்டில் பொது மக்கள் தங்கள் வீட்டின் திருமணம் போன்ற விஷேசங்களுக்கு கூட பல கெடுபிடிகளுக்கு இடையில் அளந்து தருவதைப் போல அரசு 2.5 லட்சம் தரும் இவ்வேளையில் பா.ஜ.க பிரமுகர்களிடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Comments are closed.