மே தினத்தில் இரண்டு துப்பரவு தொழிலாளர்கள் பலி

0

ஹைதராபாத் நகரில் மே தினத்தன்று பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்து கொண்டிருந்த இரண்டு துப்பரவு தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்களின் உடல்களை காவல்துறையினர் மீட்டு அருகில் உள்ள உஸ்மானியா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் வீராசாமி மற்றும் கோட்டையா என்று தெரிய வந்துள்ளது. மே தினத்தன்று வழக்கமாக பனி செய்பவர்களுக்கு விடுமுறை என்பதால் இவர்கள் அப்பணிக்கு சென்றுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உரிய நேரத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததே இந்த இருவர் உயிரிழந்ததற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இந்த பணியில் ஈடுபட்டு வருபவர்கள், இது போன்று மரணங்கள் நடப்பது முதல் முறையல்ல என்று கூறியுள்ளனர்.

Comments are closed.