மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் கைது ஜனநாயக விரோதமானது! – பாப்புலர் ஃப்ரண்ட்

0

பத்திரிகை செய்தி

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் கைது ஜனநாயக விரோதமானது! – பாப்புலர் ஃப்ரண்ட்  கண்டனம்!

சமீபத்தில் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை கூட்ட அமரவில் பேச சென்றுள்ள மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள் அவரை தாக்க முற்பட்ட சிங்கள வெறியர்களை கண்டித்தும், இத்தகைய கொடும்பாதக செயலை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடனும் இன்று (29.09.2017) சென்னையில் தமிழ்புலிகள் அமைப்பின் சார்பாக தோழர். நாகை திருவள்ளுவன் அவர்களின் தலைமையில் நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமது ஆதரவை தெரிவிப்பதற்கு தோழர் திருமுகன் காந்தி, தோழர் பிரவின் குமார் மற்றும் சிவக்குமார் சென்றுள்ளார்கள். அச்சமயத்தில் நுங்கம்பாக்கம் காவல்துறை துணை ஆனையர் அவர்களை தடுக்க முற்பட்டார். அவரிடம் தாம் ஆதரவு மட்டுமே தெரிவிக்க வந்ததையும், தமது ஆதரவை தெரிவித்து உடனே சென்று விடுவதாகவும் தெரிவித்ததுடன், அதே போன்று தமது ஆதரவை தோழர் நாகை திருவள்ளுவனிடம் தெரிவித்துவிட்டு தமது வேலை நிமித்தம் சென்றுவிட்டார் தோழர் திருமுருகன் .

செல்லும் வழியில் லயோலா கல்லூரி அருகாமையிலுள்ள தேனீர் கடையில் தேனீர் அருந்திக் கொண்டிருந்த போது அங்கு நுங்கம்பாக்கம் காவல் துறை துணை ஆனையர் சில காவல் துறையினருடன் வந்து தோழர் திருமுருகன் உள்ளிட்ட மூவரையும் கைது செய்துள்ளனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறல் மட்டுமல்ல ஜனநாயகத்திற்கு எதிரானது.

அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது குற்றம் என்றால் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு அடைக்கபட்ட மண்டபத்தில் தான் இவர்களையும் அழைத்து சென்றிருக்க வேண்டும். ஆனால், இம்மூவர்களையும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றது மட்டுமல்லாமல் எதற்காக கைதிற்கு செய்யபட்டார்கள் என்பதையும் தெரிவிக்கவில்லை. இத்தகைய சட்டவிரோத கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையான கண்டனங்களை பதிவு செய்து கொள்கின்றது.

இப்படிக்கு
எம். முஹம்மது இஸ்மாயில்,
மாநில தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

Comments are closed.