மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து: இந்தியா – இஸ்ரேல் இடையேயான நட்புறவு நீடிக்கும் என உறுதி

0

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியதிலிருந்தே பாஜக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. பீகார், உத்திரப்பிரதேசம், டெல்லி, ஹிமாச்சல் பிரதேசம், அருணாச்சல் பிரதேசம், குஜராத், மகாராச்டிரா உட்பட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. மோடி, அமித்ஷா போன்ற தலைவர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.

இந்நிலையில் மோடிக்கு பாஜக அமைச்சர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இலங்கை அதிபர் ரனில் விக்ரம சிங்கேவும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். தற்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டான்யாஹு மோடியை வாழ்த்தியுள்ளார். இந்தியா – இஸ்ரேல் இடையேயான நட்புறவு தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.