மோடிக்கு உதவி செய்த குற்ற உணர்ச்சியுடன் இருகின்றேன்: ராம்ஜெத்மலானி

0

பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி தான் மோடிக்கு உதவியது குறித்து குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறேன் என்றும் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்வதாகவும் கூறியுள்ளார். இது மோடி வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டுவர தவறியதனால் ஏற்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாத் சிந்தி சபா வின் பிராந்திய மாநாட்டில் மக்கள்உ முன் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் பா.ஜ.க தலைவர்கள் கறுப்புபணத்தை மீட்டு வருவோம்  என்று உறுதி அளித்ததின் பேரில் மோடி பிரதமர் ஆவதற்கு தான் உதவியதாக அவர் கூறியுள்ளார்.ஆனால் மோடி பிரதமர் ஆகிய பின் தனது வாக்குறுதியில் அவர் தவறிவிட்டார் என்று அவர் கூறியுள்ளார். மேலும் இனியும் அவர் அதனை நிறைவேற்றுவார் என்று நம்பிக்கை இல்லை என்று அவர் கூறியுள்ளார்.  மக்கள் யாரும் இனி  மோடியை நம்ப வேண்டாம் என்று கூறவே தான் அங்கு வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 

Comments are closed.