மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பிய தலித் மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றம்

0

பாபசாஹிப் பீமாராவ் அம்பேத்கர் பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மோடிக்கு எதிராக “மோடி ஒழிக்க, மோடி திரும்ப போ” என்று கோஷம் எழுப்பிய தலித் மாணவர்களை அவர்கள் தங்கும் விடுதியில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர் அதிகாரிகள்.

ராம் கரன் நிர்மல் மற்றும் அம்ரேந்திர குமார் ஆர்யா என்கிற இருவர் தான் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பியவர்கள். இவர்கள் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பியதும் அங்கிருந்த பாதுகாப்பு படையினர் இவர்களின் வாயை அடைத்து வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று வெளியேற்றினர். மேலும் இவர்களை  இந்திய தண்டனை சட்டப்பிரிவு 151 (பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்) இன் கீழ் கைதும் செய்தனர். பின்னர் காவல்துறையின் பினையிலேயே வெளிவந்த இவர்கள் தங்கள் விடுதிக்கு சென்ற பொது அதிர்ந்தனர்.

மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பியதனால் பாபசாஹிப் பீமாராவ் அம்பேத்கர் பல்கலைகலத்தின் அதிகாரிகள் இவர்களை தண்டிக்கும் விதமாக பல்கலைகழக விதியில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இதைப்பற்றி நிர்மல் சிங் கருத்து தெரிவிக்கையில் இத்தகைய தொல்லைகளைத்தான் ஹைதராபாத் பல்கலைகழகத்தில் ரோஹித்தும் அனுபவித்தார் என்று கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில் என்னுடைய கருத்து வேறுபாட்டை நான் வெளிப்படுத்தினேன். அதற்காக என்னை விடுதியில் இருந்து வெளியேற்றியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

கடும் குளிரில் இரவை கழிக்க விடப்பட்ட அந்த இரு மாணவர்களுக்கும் தாங்கள் செய்தது குறித்து எந்த வித குற்ற உணர்வும் இல்லை. மாறாக அவர்கள் தாங்கள் செய்தது குறித்து பெருமைப்படுகின்றனர். நாங்கள் எங்கள் கருத்துவேறுபாட்டை தெரிவிக்கும் உரிமையுள்ள நாட்டின் பொறுப்புள்ள குடிமகன்களாக உணர்கிறோம் என்று அவர்கள் கூறியுள்ளனர். அவர்களின் இந்த செயல் விளம்பரத்திற்காக செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு இல்லவே இல்லை என்றும், ரோஹித்தின் மரணம் குறித்து மோடியின்  மவுனத்தை தாங்கமுடியாமல் தான் இந்த செயலில் இறங்கினோம் என்றும் தங்களுக்கு என்று எந்த அரசியல் பின்பலமும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

இத்துனை நாள் அமைதியாக இருந்த மோடி தற்பொழுது ரோஹித்தின் மரணம் குறித்து நீலிக்கண்ணீர் வடிக்கின்றார். அதுவும் நாங்கள் கோஷம் எளிப்பிய பிறகே என்று அந்த மாணவர்கள் தெரிவத்துள்ளனர். எங்களை காவல்துறையினர் விடுவித்தாலும் எங்கள் போக்கை நாங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கடுமையாக எச்சரித்தே எங்களை விடுதலை செய்தனர். இதுவே நாங்கள் முஸ்லிம்களாக இருந்தால் எங்களை அவர்கள் எளிதாக தீவிரவாதி என்று முத்திரை குத்தியிருப்பார்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ரோஹித் வெமுலாவின் அனுபவங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில், இத்தகைய பாகுபாடுகளை நம் நாட்டின் தலித்களும் முஸ்லிம்களும் அதிகளவில் சந்தித்து வருகின்றனர் என்றும் தினம் தினம் தலித்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும் ஜாதி பாகுபாடு பற்றியும் செவியுருகிரோம் என்றும் கூறியுள்ளனர். மேலும் எங்களின் பல்கலைகழகத்திலும் ஜாதிய பாகுபாடுகளை நாங்கள் அனுபவித்துள்ளோம் என்றும் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் இந்த பாகுபாட்டினை பார்கிறோம், இத்தகைய போராட்டங்களை கொண்டு ரோஹித் போன்ற மாணவர் அனுபவித்துவரும் அனைத்து அடக்குமுறைகளையும் வெளிக்கொணர விரும்புகிறோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எந்த ரோதித்தின் மறைவிற்காக மோடி முதலைக் கண்ணீர் வடித்தாரோ அதே ரோஹித்தும் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.