மோடிக்கு எதிராக செயல்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் பட்-க்கு ஆயுள் தண்டனை!

0

குஜராத் மாநிலத்தில் ஐ.பி.எஸ் அதிகாரி பணியாற்றிவர் சஞ்சய் பட்.  குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தை கவத்தில்கொள்ளாமல் இருக்கும்படி அப்போது அம்மாநில முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் கூறியதாக சஞ்சிவ் பட் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

குஜராத் கலவரம் குறித்து விசாரணை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு மற்றும் நானாவதி கமிஷனில் குஜராத் அரசுக்கு எதிராகவே இவர் வாக்குமூலம் அளித்தார். உச்ச நீதிமன்றத்திலும் மோடிக்கு எதிராகவே பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனால், 2015-ம் ஆண்டு அவரது ஐ.பி.எஸ் பதவி பறிக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னரும்கூட அவரை ஏதும் தடுக்கவில்லை. சமூக வலைதளங்களில் தொடர்ந்து பாஜகவையும் மோடியையும் விமர்சித்து வந்தார்.

30 ஆண்டுகளுக்கு முன் ஜாம்நகர் கூடுதல் சூப்பிரண்டாக சஞ்சீவ் பட் பணியாற்றிய போது, ஒரு கைதி நீதிமன்ற காவலில் மரணமடைந்தது தொடர்பாக அவர் மீது நிலுவையில் இருந்த வழக்கு தூசிதட்டப்பட்டு கடந்தாண்டு அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை ஜாம்நகர் நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், இன்று அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

அவருடன் சேர்த்து பிரவீன் சிங் ஜாஹேலே என்ற அதிகாரிக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.