மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ

1

எல்லைப்பாதுகப்பு படையினரின் மோசமான உணவு தரம் குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட எல்லைப்பாதுகப்பு படை வீரர் தற்போது மோடிக்கு கேள்வி விடுக்கும் வகையில் மற்றொரு வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில், “நான் பிரதமரிடம் ஒன்று கேட்க விரும்புகின்றேன். நான் வீடியோவில் பதிவு செய்த எல்லைப் பாதுகாப்பு வீரர்களின் உணவு உண்மையானது. ஆனால் அதன் மீது இன்றுவரை எந்த ஒரு விசாரணையும் நடத்தப்படவில்லை. ஆனால் நான் விரட்டப்படுகிரேன். இது ஏன் நடக்கிறது? இந்த நாட்டில் இருந்து ஊழலை ஒழிக்கப்போவதாக பிரதமர் கூறினீர்கள். என்னுடைய துறையில் உள்ள ஊழல் குறித்து நான் பதிவிட்டேன். ஒரு துறையில் ஊழலை சுட்டிக்காட்டுவதன் விளைவு இது தானா?” என்று தான் தற்போது உயர் அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாதுகாப்பு படையினருக்கு கொடுக்கப்படும் உணவு குறித்து யாதவ் வீடியோ பதிவு செய்ததும் அவரை குறித்த எதிர்மறை கருத்துக்களை எல்லைப் பாதுகாப்பு படை உயர் அதிகாரி வெளியிடத் தொடங்கினர். இதில் மேலும் ஒரு படி சென்று யாதவின் ஃபேஸ்புக் நண்பர்களில் 17% பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று கருத்தும் பரவவிடப் பட்டது. இது குறித்து யாதவ் கூறுகையில், தான் தனது மொபைல் போன்னை ஜனவரி 10 ஆம் தேதி உயர் அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டதாகவும் அதன் பின்னர் அவர்கள் அதில் மாற்றங்கள் செய்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார். அதன் பின் தான் இந்த பாகிஸ்தானிய நண்பர்கள் வந்தது என்றும் அதனால் தன்னைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தான் மக்களிடம் நேரடியாகவே தொடர்பு கொள்வதாக என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், “நான் நாட்டில் உள்ள 125  கோடி மக்களிடம் ஒரு வேண்டுகோள் வைகின்றேன். நீங்கள் பிரதமரிடம், ஒரு இராணுவ வீரன் இராணுவத்தில் உள்ள ஊழலை வெளிக்கொண்டுவர நினைத்தால் அவரை ஏன் மனதளவில் துன்புருத்துகின்றீர்கள் என்று கேளுங்கள். என்னுடைய விருப்ப ஓய்வு கூட தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.

யாதவின் நிலை அந்த வீடியோவிற்கு பிறகு முகவும் மோசமாக உள்ளது என்றும் அவர் உயர் அதிகாரிகளால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார் என்றும் அவரது மனைவி முன்னர் குற்றம் சாட்டியிருந்தார். (பார்க்க செய்தி). யாதவ்வின் வீடியோ வைரல் ஆன பிறகு டில்லி உயர் நீதிமன்றத்தில், எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்படும் உணவு குறித்த தகவல்கள் அனைத்தும் பொய்யானது என்று BSF தெரிவித்துள்ளது.

Discussion1 Comment

  1. மத்திய பாஜக அரசின் ஊழலை வெளியே கொண்டுவரும் அனைவரையும் தேசத்துரோகி என்று சொல்வது தானே பாசிசத்தின் கொள்கை