மோடியின் தேர்தல் நடத்தை விதிமீறலை வெளியிட தேர்தல் ஆணையம் மறுப்பு

0

2019 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய போது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. எதிர்க்கட்சிகள் புகார்கள் கொடுத்த போது கண்டுக்கொள்ளாமல் தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

மோடி மற்றும் பாஜகவினர்களின் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வழங்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பத்திரிகையாளர் ஒருவர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் இந்த விவரங்களை தர தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் தேர்தல் நடத்தை விதிமீறல் விவரங்களை வெளியிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave A Reply