மோடியின் தொகுதி வாரணாசியில் கோக்கோ கோலா நிறுவனத்தால் தண்ணீர் தட்டுப்பாடு

0

மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள 18 கிராமங்கள் அப்பகுதியில் அமைந்திருக்கும் கோகோகோலாநிறுவனத்தால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.
வாரணாசியின் மேஹ்திகன்ஜ் என்ற பகுதியில் அமைந்திருக்கும் கிராமங்களில் அப்பகுதியில் அமைக்கப்பட்டகோகோகோலா ஆலையால் அது தொடங்கப்பட்ட 1999 முதலே தண்ணீர் தட்டுப்பாடு தங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று கூறுவருகின்றனர்.

அந்தக் கிராமங்களில் தலைவர்கள் ” கோகோகோலாவை இனியும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். கோகோகோலா எங்கள்பகுதியில் இருந்து வெளியேறும் நேரம் வந்துவிட்டது” என்று கூறியுள்ளார்கள்.

சர்வதேச அளவில் கோகோகோலா தன்னை ஒரு ஒரு பொறுப்பான தண்ணீர் பயனாளர் என்று காட்டிக்கொண்டிருக்கிறது.ஆனால் இந்தியாவில் அது நிலத்தடி நீரைச் சுரண்டுகிறது. இதற்கான விலையை ஏழைகளும், பெண்களும், குழந்தைகளும்,விவசாயிகளும் கொடுத்துவருகிறார்கள். கோகோகோலா தன லாபத்திற்காக நிலத்தடி நீரைச் சுரண்டுவதால் இவர்களுக்குஅடிப்படைத் தேவைக்கான தண்ணீர் கிடைப்பது கூடக் கடினமாகிவிட்டது.

மேஹ்திகன்ஜ் விவசாயத்தை நம்பி வாழும் மக்களுடைய ஒரு பகுதி. இங்கே நிலத்தடி நீர் தான் இவர்களின்விவசாயத்திற்கு முக்கிய ஆதாரம். அதன் மூலம் தான் குடிநீரில் இருந்து தங்கள் அன்றாட தேவைக்கான தண்ணீரையும்,விவசாயம் மட்டும் கால்நடைகளுக்கு தேவையான தண்ணீரையும் பெற்று வந்தார்கள். அதே தண்ணீரை கோகோகோலாதங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்திவருவதால் இவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
2011 ஆம் ஆண்டே இந்தப் பகுதி அதிகமாகச் சுரண்டப்பட்ட பகுதி என்று மத்திய நிலத்தடி நீர் அதிகாரதுரை அறிவித்திருந்தது.ஆனால் கோகோகோலா நிறுவனமோ தங்கள் நிறுவனம் நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் தான் இந்தத் தண்ணீர் தட்டுப்பாடுஏற்பட்டது என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்று கூறியுள்ளது.

தங்களின் இந்த பிரச்சினையை தீர்க்க 18 கிராமங்களின் நிர்வாகிகள் சேர்ந்து கோகோகோலா நிர்வாகத்திற்கு இந்தப்பகுதியில் செயல்பட உரிமம் வழங்கிய மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்திற்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

இதேப் போன்று தமிழகத்திலும் தாமிரபரணி ஆற்று நீரை பெப்சி நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது நினைவிற்குரியது.தாமிரபரணியை சுற்றியுள்ள பகுதிகளும் தண்ணீர் தட்டுப்பாட்டு பகுதிகளாக மாறுவதைத் தடுக்க வேண்டும்.

Comments are closed.