மோடியின் நடவடிக்கைகளை ட்விட்டரில் புகழ்ந்தால் பணம்?

0

கருப்புப் பணம் மீது துல்லிய தாக்குதல் நடத்தியதாக கூறி வழக்கில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை நவம்பர் 8 ஆம் தேதி தடை செய்தது பா.ஜ.க அரசு. மோடி அரசின் இந்த நடவடிக்கையின் பாதகங்களையும் இந்த நடவடிக்கையால் மக்கள் படும் அவதிகளையும் சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோர் பதிவிட்டு வருகின்றனர்.

இதனையடுத்து பா.ஜ.க அரசிற்கு ஏற்பட்ட எதிர்மறை விளம்பரத்தை சரி செய்யும் வகையில் ட்விட்டரில் மோடி அரசிற்கு ஆதரவாக #IndiaDefeatsBlackMoney என்கிற ஹாஷ்டாகில் மோடியின் நடவடிக்கைக்கு ஆதரவாக பதிவிடுபவர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த ஹாஷ்டாகில் பதிவிடுபவர்கள் நரேந்திர மோடி, அருண் ஜேட்லி மற்றும் தேவேந்திர ஃபட்நாவிஸ் ஆகியோரை டாக் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதில் நிதி அமைச்சர் மற்றும் மகாராஷ்டிரா முதல்வரை டாக் செய்யச்சொல்வது கல்விகளை எழுப்புகிறது.

சமூக வலைதளங்களில் அதிகளவில் மக்கள் பின்தொடர்பவர்களிடம் இதற்கென விலை பேசப்பட்டதாக தன்னை சமூக வலைதளங்களில் 30000  பின்தொடர்பவர்களை கொண்ட சமூக வலைதள பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை ஃபாக்டரி டெய்லி என்ற தளம் தெரிவித்துள்ளது. இதற்கு யார் நிதியுதவி வழங்குகின்றார்கள் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. ஆனால் அவர்கள் மகாராஷ்டிரத்தை சார்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பான மாதிரி ட்வீட்கள், மோடியின் நடவடிக்கைகளுக்கு பின்னர் கஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்றும், இந்திய பொருளாதாரத்தை முன்னேற்றும் என்பது போன்று இருக்கின்றது.

czoxzs4wqaalw_l czox9spxgaaaody czobqjgxuaahkzy

இது போன்று ட்வீட்களுக்கு பணம் பெறுவது பல காலமாக இருந்து வருகிறது, அது அரசியல் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இருக்கலாம் அல்லது ஒரு பெருநிருவனங்களை உயர்த்திப்பிடித்து விளம்பரம் செய்வதாக இருக்கலாம். மோடி 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவிப்பு செய்தபின் அவரை ட்விட்டரில் பின்தொடர்பவர்களில் சுமார் 3 லட்சம் பேர் விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. பின்னர் அது ட்விட்டர் போலி கணக்குகள் மீது நடவடிக்கை எடுத்த காரணத்தால் ஏற்பட்டது என்று கூறப்பட்டது குறிபிடத்தக்கது.

Comments are closed.