மோடியின் பயிர்க்காப்பீடு திட்டம் யாருக்கானது?

0

மோடியின் பயிர்க்காப்பீடு திட்டம் யாருக்கானது?

மோமாடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன் விவசாயிகள் தற்கொலைக்கு முடிவு கட்டப்போவதாகவும், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கான உற்பத்தி செலவை காட்டிலும் கூடுதலாக 50% கொள்முதல் விலை நிர்ணயித்து வழங்கப் போவதாகவும், விவசாயத்தில் வேலைவாய்ப்புகளை பெருக்கப் போவதாகவும், விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதி, பென்சன் வசதி, இன்சூரன்ஸ் வசதி தருவதாகவும் ஏராளமான வாக்குறுதிகளை அளித்தது.

2014 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ‘விவசாயிகளுக்காக நான் கடுமையாக பாடுபடப் போகிறேன்’ ‘நாட்டினுடைய பொருளாதாரத்தை நாம் முன்னேற்ற விரும்பினால் விவசாயத்திற்கு நாம் முன்னுரிமை வழங்க வேண்டும்’ என்று கூறினார் மோடி. தற்போது மோடி யாருக்காக பாடுபட்டு வருகிறார், யாருக்கு முன்னுரிமை வழங்குகிறார் என்பதையெல்லாம் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

மோடி ஆட்சிக்கு வந்தபிறகு விவசாயிகளின் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2013 ல் 11,772 ஆக இருந்த விவசாயிகளின் தற்கொலை 2014 ல் 12,360 ஆகவும், 2015 ல் 12,602 ஆகவும் உயர்ந்துள்ளது என்பதை மத்திய அரசின் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்.சி.ஆர்.பி.) கூற்றின் படி 1995 முதல் 2015 ம் ஆண்டு வரை சுமார் 3.10 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். ஆனால் 2016 முதல் 2018 வரை விவசாயிகளின் தற்கொலை குறித்த எந்த புள்ளிவிபரத்தையும் வெளியிட மோடி அரசு அனுமதிக்கவில்லை. விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கு வட்டியை குறைப்போம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு 7% ஆக இருந்த வட்டி விகிதத்தை 9% ஆக உயர்த்தினார்கள். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.