மோடியின் பிரச்சார மேடைக்கு கீழ் திடீர் தீ விபத்து

0

உத்தரபிரதேசம் அலிகாரில் பாஜக கட்சி நடத்திய தேர்தல் பிரசாரத்தில் நரேந்திர மோடி பேசிக்கொண்டிருந்தார். அப்போது மேடைக்கு கீழே செல்லும் வயர் அதிக வெப்பம் காரணமாக திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக தீயை அணைத்தனர். இத்னால் அங்கு பரபரப்பு நிலவியது. தீயை அணைத்த பிறகு, மீண்டும் மோடி தனது பேச்சை தொடங்கினார். மேலும் அந்த பிரச்சரக்கூட்டத்தில் உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உட்பட பாஜகவின் முக்கிய தலைகளும் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.