மோடியின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்ற 22 அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள்

0

மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் மொத்தம் 58 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் கல்வித் தகுதி, சொத்து விவரம் மற்றும் அவர்கள் எதிர்கொண்டுள்ள வழக்குகள் உள்ளிட்டவைகள் குறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதில் வியாழக்கிழமை பதவியேற்ற அமைஅமைச்சர்களில் 51 பேர் கோடீஸ்வரர்கள். 22 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 47 மந்திரிகள் பட்டதாரிகள். ஒரு மந்திரி டிப்ளமோ படித்துள்ளார். 8 மந்திரிகள் 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்துள்ளனர்.

16வது மக்களவையை ஒப்பிடுகையில், இந்த மக்களவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் குற்றவழக்குகள் கொண்ட மந்திரிகளின் எண்ணிக்கை 8 சதவீதம் அதிகம் ஆகும். தீவிர குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள மந்திரிகளின் எண்ணிக்கை 12 சதவீதம் உயர்ந்துள்ளது எந்த ஆய்வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.