மோடியின் மகப்பேறு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பணத்தில் ஒரு ரூபாய் கூட செலவிடாத உத்திர பிரதேச அரசு

0

மோடியின் மகப்பேறு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பணத்தில் ஒரு ரூபாய் கூட செலவிடாத உத்திர பிரதேச அரசு.

பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்ட மோடியின் மகப்பேறு திட்டத்தின் கீழ் உத்தர பிரதேச மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட 336 கோடிகளில் 2018 ஆகஸ்டு மாதம் வரை ஒரு ரூபாயை கூட உத்திர பிரதேச அரசு செலவிடவில்லை என்று தெரியவந்துள்ளது.

2017 -2018 ஆண்டு காலத்திற்கு 29 மாநிலங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட மொத்தம் 2049 கோடி ரூபாய்களில் அதிகப்படியாக உத்திர பிரதேச மாநிலத்திகு 336 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்று தகவல் அறியும் உரிமையின் கீழ் பதுவு செய்யப்பட்ட கேள்விக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் ஒன்றுமில்லை என்று பதிலளித்துள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் பிரதான் மந்திரி மற்று வந்தனா யோஜனா என்ற இத்திட்டம் துவங்கியதில் இருந்து (ஜனவரி 2017) ஆகஸ்டு மாதம் வரையிலான காலகட்டத்தில் வெறும் 184 நபர்களே தங்களை பதிவு செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பெண் கூட இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

உத்திர பிரதேசத்தை தவிர்த்து இத்திட்டத்தில் பஞ்சாப்பில் மிகவும் குறைவான பதிவாக வெறும் 7 பெண்கள் தங்களை பதிவு செய்துள்ளனர் என்று இந்த தகவல் அறியும் கோரிக்கை மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் அந்த 7 பெண்களில் 5 பேர் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்றுள்ளனர். பஞ்சாப்பிறகு இத்திட்டத்தின் கீழ் 46.49 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் இத்திட்டத்திற்கு ஒத்த மாநிலத்தின் திட்டம் ஒன்று நடைமுறையில் உள்ளதால் இத்திட்டத்தின் கீழ் ஒருவர் கூட தங்களை பதிவு செய்துகொள்ளவில்லை.

கடந்த 2010 ஆண்டு காங்கிரஸ் அரசால் இந்திரா காந்தி மாற்றிட்வ சஹ்யோக் யோஜனா என்ற இத்திட்டத்தை பாஜக அரசு 2016 டிசம்பர் 31 ஆம் தேதி பிரதான் மந்திரி மற்று வந்தனா யோஜனா என்று பெயர் மாற்றம் செய்து அறிமுகப்படுத்தியது.

 

Comments are closed.