மோடியின் விமானப் பயணம்: ஏர் இந்தியாவுக்கு ரூ.297 கோடி கடன்பாக்கி!

0

இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி அலுவலகம் மற்றும் சில முக்கிய அரசு அதிகாரிகள் ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தாமல் ரூ.600 கோடி வரையில் பாக்கி வைத்துள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஏர் இந்தியா தரப்பிலிருந்து வழங்கப்பட்டுள்ள விவரங்களின்படி, மார்ச் 31 வரையில் ஏர் இந்தியாவுக்கு ரூ.598.55 கோடி பாக்கித் தொகை நிலுவையில் உள்ளது. இதில் பாதி அளவு பிரதமர் அலுவலகம் தரப்பிலிருந்து வழங்கவேண்டிய தொகையாகும். அதாவது பிரதமர் அலுவலகம் ஏர் இந்தியாவுக்கு ரூ.297.08 கோடியைப் பாக்கி வைத்துள்ளது.

மோடியின் விமானப் பயணம், விமானங்கள் பராமரிப்பு ஆகியவற்றுக்கான பாக்கித் தொகை அதிகமாக நிலுவையில் உள்ளது. பிரதமரின் விமானங்களை மத்திய அமைச்சரவைச் செயலாளர்தான் கையாளுவார்.

Comments are closed.