மோடியின் வெற்றி செல்லாது: அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

0

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில், உத்தர பிரதேச மாநிலத்தின் வாரணாசி தொகுதியில், நரேந்திர மோடி போட்டியிட்டு வென்றார். இவருக்கு எதிராக, முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர், தேஜ் பகதுார் யாதவ் சமாஜ்வாதி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரது வேட்புமனு எல்லை பாதுகாப்புப் படையின் சான்றிதழை, இணைக்கவில்லை எனக் கூறி நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, தன் வேட்பு மனு தவறான காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டதாகவும், வாரணாசி தொகுதியில் மோடியின் வெற்றி செல்லாது என அறிவிக்கவேண்டும் என்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில், தேஜ் பகதுார் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மோடிக்கு, நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.