மோடியின் ஹெலிகாப்டரில் வந்த கருப்பு பெட்டி!

0

கடந்த வாரம் கர்நாடகாவில் பிரச்சாரம் செய்ய வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து இறக்கப்பட்ட கருப்பு நிறப் பெட்டியில் என்ன இருந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளது காங்கிரஸ் கட்சி. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.

கடந்த 9ஆம் தேதியன்று கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டார் நரேந்திர மோடி. ,சித்ரதுர்கா ஹெலிபேட்டில் மோடி வந்த ஹெலிகாப்டர் இறங்கியவுடன், அதில் இருந்து ஒரு பெட்டியை எடுத்துக்கொண்டு சென்றனர் சிறப்புப் பாதுகாப்பு படையினர். வெளியே நிறுத்தப்பட்டிருந்த தனியார் வாகன ஒன்றில் அந்த பெட்டியை ஏற்றி அனுப்பினர்.

இந்த விவகாரம் குறித்து, கர்நாடக காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. சந்தேகத்துக்குரிய வகையில் அந்த பெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்றும், அதில் என்ன இருந்தது என்று விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது. “பிரதமரின் பாதுகாப்புக்காக ஹெலிகாப்டரில் வந்த மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீரர்கள் அந்த வீடியோவில் உள்ளனர். ஹெலிகாப்டர் தரையிறங்கிய பிறகு, அவர்கள் கருப்பு நிறப் பெட்டி ஒன்றை தனியார் வாகனத்தில் ஏற்றுகின்றனர். அது பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையினருக்கு சொந்தமானதல்ல” என்று தெரிவித்துள்ளார் கர்நாடக காங்கிரஸை சேர்ந்த மூத்த தலைவரான ஆனந்த் சர்மா.

மோடி அரசாங்கத்தின் ரஃபேல் போர் விமானத்தில் ஊழல் உட்பட நாட்டின் தனது ஐந்து ஆண்டுகால ஆட்சிக்கான கணக்கைக் குறிப்பிடுமாறு மோடியை கேட்டுக் கொண்டார். மோடிக்கு உண்மையான விஷயங்களை எதிர்கொள்ள தைரியம் இல்லை. ரஃபேல் விவகாரம் குறித்து ஏன் அமைதியாக இருக்கிறார்?

Comments are closed.