மோடியை எதிர்த்து யாராவது பேசினால் கை வெட்டப்படும: பாஜக தலைவர் சர்ச்சை கருத்து

0

பாஜக தலைவர்களையோ, மோடியையோ எதிர்த்து யாராவது விரல் உயர்த்தி பேசினால் அவர்களின் கை வெட்டப்படும் என பாஜகவை சேர்ந்த சத்பால் சிங் சத்தி பேசியுள்ளார்.

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய ஹிமாச்சலப் பிரதேச பாஜக தலைவர் சத்பால் சிங் சத்தி, ‘மேடையில் உள்ள பாஜக தலைவர்களையோ, பிரதமர் மோடியையோ எதிர்த்து யாராவது விரலை உயர்த்தி பேசினால் அவர்களின் கையை வெட்டி வீசுவோம்’ என சர்ச்சை கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

சத்பால் சிங் சத்தியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவரை தேர்தல் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.