மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடும் முன்னாள் ராணுவ வீரர்

0

ஹரியான மாநில ரேவரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் தேஜ்பகதூர் யாதவ் மோடிக்கு எதிராக போட்டியிட உள்ளார்.

முன்னாள் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் தேஜ் பகதூர் யாதவ், காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுகொண்டிருக்கும் போது விதிமுறைகளை மீறி வீடியோ ஒன்றை வெளியிட்டதால், அவர் மீது நடவடிக்கை மேற்கொண்டு பணி நீக்கம் செய்தது.

தற்போது நாடாளுமன்ற தேர்தலில் தேஜ்பகதூர் யாதவ், மோடிக்கு எதிர்த்து போட்டியிட வாரணாசி தொகுதியில் களமிறங்க உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்: ”வாரணாசியில் அதிகமானோர் என்னிடம் தொடர்பில் உள்ளனர். வாரணாசி தொகுதி வாக்காளர் பட்டியலில் எனது பெயரை இணைத்துள்ளேன். மேலும் சில மாதங்களுக்கு முன்பாக தேர்தலை சந்திக்க தயாரகிவிட்டேன். இந்த தேர்தலில் ஊழல் பிரச்சனையை மையப்படுத்தி போட்டியிட உள்ளேன்” இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.