இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் – விடியலின் நேரடி ரிப்போர்ட்

1

மோடியை கொல்ல சதியா?

(2004 ல் இஷ்ரத் ஜஹானின் போலி என்கவுண்டர் குறித்த விடியலின் நேரடி ரிப்போர்ட்)

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியடைந்தது
அதிர்ச்சிக்குள்ளான பாரதிய ஜனதா கட்சியினர் தோல்வியின் காரணங்களைத் தோண்டி எடுத்தனர்.
அதில் குஜரத்தில் முஸ்லிம்களை இனப்படுகொலைகளுக்கு ஆளாக்கிய நரேந்திர மோடிதான் காரணம் என்பதைக் கண்டு பிடித்தார்கள்.

இந்த அடிப்படையில் நரேந்திர மோடியை முதமைச்சர் பதவியிலிருந்து மாற்றியாக வேண்டும் என அடம்பிடித்தார் அட்டல் பிஹாரி வாஜ்பேயி. இது ஜூன் 12 ல் நடந்தது.

நரேந்திர மோடிக்கு எதிராக குஜராத் பி.ஜே.பி.யைச் சார்ந்த 82 சட்டசபை உறுப்பினர்களும் அணி சேர்ந்தார்கள்.

மோடியின் பதவி ஆட்டம் கண்டது.

மோடி ஒவ்வொரு சட்டசபை உறுப்பினர்களாக சந்தித்து தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டார். வழியில்லை.

வாஜ்பேயிடம் பேசிப்பார்த்தார்கள் வாஜ்பேயி விடுவதைக் ஐல்லை.

இந்நிலையில்தான் மோடியை தாக்கிட வந்ததாக நான்கு முஸ்லிம்கள் 15.06.2004 அதிகாலையில் கொலை செய்யப்பட்டார்கள்.

பி.ஜே.பி. யைச் சார்ந்தவர்களுக்கு நெருக்கடிகள் வரும் போதெல்லாம் இப்படியொரு எதிர் தாக்குதல் தவறாமல் நடந்து விடுகின்றது.

ஆனால் பின்னர்தான் அதன் கசப்பான உண்மைகள் வெளிவருகின்றன.

குஜராத் இனப்படுகொலைகளை லாவகமாக மேற்பார்வை பார்த்தபடி மோடி அதனை தனது அதி தீவிரப் புத்திசாலியாகக் காட்டிகொண்டார்.

ஃபாசிஸ்டுகள் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள் என்பதை அறிந்த மக்கள் பரபரப்பிற்கு ஆளாகி உள்ளார்கள்.

இதில் கிடைக்கும் தகவல்களை நேரடியாகத் திரட்டிவர நமது ஆசிரியர் குழுவை பம்பாய் – திருவனந்தபுரம் ஆகுய இடங்களுக்கு அனுப்பி வைத்தோம்.

இதில் கிடைத்த தகவல்களை ஒன்று திரட்டி மக்கள் மன்றத்தில் வைகின்றோம்.

நமது பம்பாய் குழு

என்ன நடந்தது என்பதை நேரடியாக அறிய சுட்டுக் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் (19) வீட்டுக்குச் சென்றோம். பம்பாய் செல்லும் வழியிலுள்ள கல்யான் ரயில் நிலையத்திலிருந்து 3 ஆவது ரயில் நிலையத்திற்கு பக்கத்திலிருப்பதே  மும்ப்ரா. இங்கு தான் இஷ்ரத் ஜஹான் பிறந்து வளர்ந்திருக்கிறார்.

கல்யான் ரயில் நிலையத்திலேயே மராட்டிய காவல்துறை அதிகாரி ஒருவர் வந்து தனது அடையாள அட்டையை காட்டி உங்களுடைய பெட்டியை சோதனையிட வேண்டுமென கேட்டார். சோதனை செய்ய அனுமதித்தோம். சோதனைகளை முடித்தார்.

நேராக மும்ப்ரா சென்றோம்.

அங்குள்ள மக்கள் அனைவருமே பீதி வயப்பட்டவர்களாக இருந்தார்கள். இஸ்ரத் ஜஹானுடைய வீட்டை கேட்ட போது ஒவ்வொருவரும் அவரைக் கேளுங்கள் இவரைகேளுங்கள் என தட்டிக் கழித்தார்கள். நாம் போகும் போதே (ஜூன் 25) சம்பவம் நடந்து (ஜூன் 15 ) 10 நாட்களாகிவிட்டது.

அதற்குள்ளால் அந்த இடமே ஒரு கலவர பூமியாகு ஓய்ந்திருந்தது.யாருக்கும் இடம் தெரியாமலில்லை .ஆனால் காட்டிவிட்டால் ‘பொடா’ பாயலாம் என்ற அச்சத்தில் யாருமே வீட்டைக் காட்ட முன்வரவில்லை.

கடைசியாக ஒரு ஆட்டோக்காரரை கையைக்காட்டினார்கள்.

ஆட்டோவில் ஏரி அமர்ந்தோம். ஒரு வழியாக இஷ்ரத் ஜஹான் வீட்டின் முன் கொண்டு நிருத்தினார்கள்.

மிகவும் ஏழ்மையான எளிமையான வீட்டின் தோற்றம். எப்போதுமே வசதியாக இருந்ததற்கான எந்த அடையாளத்தையும் காண முடியவில்லை. கதவைத் தட்டினோம். இஷ்ரத் ஜாஹனுடைய தம்பி அன்வர் கதவை திறந்தார்.

‘நீங்கள் யார்?” எனக் கேட்டார்.

“சென்னையிலிருந்து வெளிவரும் விடியல் வெள்ளி என்ற பத்திரிகையிலிருந்து வருகிறோம்” என்றோம்.

“வீட்டில் வைத்து எதுவுமே பேசிட இயலாது வாருங்கள்” என அழைத்து அதே பகுதியிலுள்ள சமாஜ்வாடி கட்சியின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

சமாஜ்வாடிகட்சி அலுவலகத்தில் அஸத் இன்ஜினியர் இருந்தார். அவர் முன்னிலையில் தான் பேச தொடங்கினோம்.

“என் அக்காள் சனிக்கிழமை தான் அமதாபத் சென்றாள். போகும்போது சொல்லிட்டுதான் போனாள். எப்போதுமே கம்பெனி வேலையாகப் போகும்போது போனவுடன் தொலைபேசியில் தகவல் தருவாள். ஆனால் இந்த முறை எந்தத் தகவலும் வரவில்லை. நாங்கள் எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கும் போதுதான், 16.6.04 அன்று காலையில் பத்திரிகையாளர்களும் தொலைகாட்சியினரும் எங்கள் வீட்டை உடைக்காத குறையாக உள்ளே   புகுந்தார்கள். என் தாயாருக்கும் எதுவுமே புரியவில்லை.

பிறகு என் சகோதரி இஷ்ரத் ஜஹானை பற்றிக் கேள்விகளைத் தொடுத்தார்கள்.

நடந்தது எதையுமே அறியாத என் தாயார் என் பெண்ணைப் பற்றி நீங்கள் ஏன் விசாரிகின்றீர்கள் எனக் கேட்டு எரிந்து விழுந்தார்கள். அதன் பின்னர் வந்திருந்தவர்கள் என் மூத்த சகோதரி ஜீனத்தை அழைத்து, என் அக்காள் இஷ்ரத் ஜஹான் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் என்பதைச் சொன்னார்கள்.

எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதற்குள் என் அக்காவின் (இஷ்ரத் ஜஹானின்) போட்டோக்களை தேடி எடுத்துச் சென்றுவிட்டார்கள்.

சற்று நேரத்திற்கெல்லாம் காவல்துறையினர் வந்து வீட்டிலிருந்த எல்லா போட்டோக்களையும் அள்ளிக் கொண்டு சென்று விட்டார்கள்.

எல்லோரும் இப்படி எங்களை கெடுபிடிக்கு ஆளாக்கிக் கொண்டிருந்தபோது நாங்கள் வெளியே இறங்கி பத்திரிகைகளை வாங்கி செய்திகளைப் படித்தோம்.

எங்களுக்கு எதுவுமே புரியவில்லை. எல்லாம் பொய் என்பது மட்டும் எங்களுக்கு நன்றாக தெரிந்தது. ஆனால் என்ன செய்வது?அக்காள் பினமாக்கப்பட்டுவிட்டாள் என்றபோது இனி என்ன செய்து என்ன பலன்?

இதற்கிடையே அபூ ஆசிம் ஆஸ்மி என்ற சமாஜ்வாடி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தன்னுடைய கட்சியின் மும்ப்ரா பொறுப்பாளர் ஷாஹிப்கான் அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருகின்றார்.

அதில் இஷ்ரத் ஜஹான் மிகவும் நல்லபெண் எனக் கேள்விபட்டேன். இவர்கள் ஏதோ தகிடுதத்தங்களை செய்துள்ளார்கள். அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என ஏவி இருக்கின்றார்.

இந்த அடிப்படையில் ஷாகிப் கான் அவர்களும் உதவி செய்ய முன்வந்துள்ளார்கள்.

பிறகு என்ன நடந்தது என்பதை வழக்கறிஞர் ஷாஹிப் கான் தரும் பெட்டியை தருகிறோம்.

வழக்கறிஞர் ஷாகிப் கான்

(சமாஜ்வாடி கட்சி மும்ப்ரா பகுதி தலைவர்)

16 ஆம் தேதி இரவு நீங்கள் இஷ்ரத்தின் உடலை மீட்க குஜராத் சென்றுவந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. மேலும் சட்ட ரீதியான நடவடிக்கைகளும் நீங்கள் மேற்கொள்கிறீர்கள் என்று கூறினார்கள். இதுவரை நடந்தது என்ன?

சம்பவம் நடந்த அடுத்தநாள் அதாவது ஜூன் 16 இரவு தான் எனக்குத் தெரியவந்தது. உடனேயே தகவல் சேகரிக்க முயற்சி செய்தோம். அப்பொழுது அந்த பெண் நல்ல பெண் என்றும், குடும்பம் நல்ல குடும்பம் என்றும் அறிந்தோம். மேலும் இரண்டு வருடங்களுக்கு முன்னாள் தந்தை இறந்தார்.ஆகையால் எல்லோரும் வீட்டில் டியூசன், எம்ராய்டிங், கேட்டரிங் போன்ற வேலைகளை எல்லோரும் சேர்ந்து செய்து வந்தனர். இதனால் வீட்டுத் தேவைகள் ஓரளவு நடந்து வந்தது. இதையெல்லாம் உறுதி செய்த பிறகு நான் அவர்கள் வீட்டிற்குச் சென்றேன்.

பிறகு அவர்களை அழைத்துக் கொண்டு குஜராத் சென்றேன். எங்களுடன் அங்கே இருக்கக்கூடிய சமூக நலத்தொன்டர்கள் (எங்கள் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் மற்றும் அப்துல் ரவூஃகான் முன்னாபாய் மற்றும் பலர் 12 பேர் சென்றோம்.அங்கே சென்று கிரைம் பிரான்சிடம் பேசினோம். அதாவது பிணத்தை எங்களிடம் ஒப்படையுங்கள் நாங்கள் இறுதி சடங்கு செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். என் முன்னிலையில் 2 மணி நேரம் விசாரணை செய்தார்கள். விசாரணைக்கு பிறகு என்னிடம் பெண்ணின் தாயாரை எங்களுடைய உயர் அதிகாரிகளிடம் 5 அலல்து 10 நிமிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார்கள். அப்பொழுது சரி நானும் வருகிறேன் என் முன்னிலையில் விசாரணை நடக்க வேண்டும் என்று கூறினேன்.

ஆனால் அவர்களை 5 நிமிடம் தான் என்று கூறி பெண்ணின் தாயாரை தனியாக அழைத்துச் சென்றார்கள். 20 நிமிடம் கழிந்தது. ஆகையால் என்னை உள்ளே அனுப்புமாறு கூறினேன். தனியாகத்தான் விசாரணை செய்ய வேண்டும் ஆகையால் நீங்கள் உள்ளே செல்ல முடியாது என்றார்கள். நான் அவர்களுடன் வந்த வழக்கறிஞர், என்னை அனுமதித்தே ஆக வேண்டும் என்று கூறியும் என்னை அனுமதிக்கவில்லை. ஒரு மணி நேரத்திற்கு பிறகு பெண்ணின் தாயார் ஷமீமா பீ வெளியே வந்தார்.

பிரிண்ட் மீடியாவைச் சேர்ந்தவர்கள் பேச வேண்டும் என்றார்கள்.போலீசார் மறுத்தனர். இருந்தும் நாங்கள் பேசினோம். போலீசார்கள் வாகனங்களை கொண்டு எங்களுக்கு முன்னும் பின்னும் ஓசையையும் புகையையும் ஏற்படுத்திக் கொண்டு இருந்தனர்.

பிறகு மருத்துவமனை சென்று உடலை பெற்றோம். போஸ்ட்மார்டம் ரிபோர்டை கேட்டோம். 15 நாட்களுக்கு பிறகுதான் கிடைக்கும் என்று எழுதி தந்தார்கள். நாங்கள் வந்துவிட்டோம்.

ஒரு மணி நேரம் உயர் அதிகாரிகள் என்ன விசாரணை செய்தார்கள்?

இஸ்ரத்தின் தாயார் ஆம்புலன்ஸ் உடனும் நாங்கள் வேறு வாகனத்தில் வந்தோம். வந்த பிறகு பேச முடியவில்லை. ஆனால் உடலை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் எங்களுக்கு சாஹஅகமாக சொல்ல வேண்டும் என்று பேரம் பேசியதாக பிறகு அறிந்து கொண்டேன். உடலைப் பிர அவர்களுக்கு சாதகமாக பேசியிருக்கலாம். (ஆனால் மீடியாவின் முன்னிலையில் இதைச் சமீம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்)

பிறகு தினம் தினம் இரவு பகல் எந்த நேரமும் லோக்கல் போலீஸ்காரர்களும் மீடியாகாரர்களும் அடிக்கடி விசாரணை என்று கூறி வந்து அவர்களை நிம்மதியில்லாமல் ஆக்கிவிட்டார்கள்.

ஜாவித் – இஷ்ரத் தொடர்பு பற்றி …

எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இஷ்ரத் நல்ல பெண். படிப்பறிவுள்ள பெண்.படித்து முன்னுக்குவர வேண்டும் என விரும்பிய பெண். கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவியாக குடும்பத்தை நல்ல முறையில் முன்னேற்ற வேண்டும் என்றும் எண்ணம் கொண்ட பெண்.

ஜாவித் என்பவர் 1992 லிருந்து 1995 வரை ரஷீத் காம்பவுண்டில் இருந்திருக்கின்றார். அப்படி இருந்திருந்தால் இஷ்ரத்தின் வயது 10 அலல்து 11 ஆக இருந்திருக்க வேண்டும். அந்த நேரத்தில் தொடர்பு என்றெல்லாம் கூறுவது எனக்குப் புரியவில்லை.அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

அப்படி இஷ்ரத்தும் ஜாவித்தும் ஒருவரை ஒருவர் அறிந்திருந்தாலும் தெரிந்திருந்தாலும், தீவிரவாதத்திற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது. அவளோ வேலை தேடிக் கொண்டும் இன்டர்விக்கும் சென்றுக் கொண்டிருந்த பெண். அதற்காக தன தாயிடம் வெளியூர்களுக்கு வேலை தேடி செல்ல வேண்டியிருக்கும் என்று கூறியும் இருக்கிறாள்.

அவ்வாறு வேலை தேடி செல்லும் போது இவர்களுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் தீவிரவாதம், ஒருவரை கொலை செய்ய வந்ததாக கூறுவது எப்படி? நடந்து முடிந்த எதிர்த்தாக்குதலில் ஒரு போட்டோ பிரசுரித்தார்கள். அதிலே சாய்ந்த நிலையில் உட்காரவைத்து இருக்கிறாள். ஜாவித் என்று சொல்லக்கூடியவர் காரின் முன் வலது இருக்கையிலிருந்து மடியில் சாய்ந்து இருக்கிறார். எதிர்தாக்குதல் என்றால் ஓட நினைத்திருப்பார்கள். ஏதாவது செய்து இருப்பார்கள்.

ஆனால் அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. மேலும் டி.வி.யில் காட்சிகள் காட்டும் போதும் A.K.56 என்று ஏதோ ஆயுதம் ஒன்றைக் காட்டினார்கள், எனக்கு அதுபற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் ஒரு அதிகாரி கூறினார்,”அந்த ஆயுதத்தில் ஒரு லாக் சிஸ்டம் உள்ளது. அது திறக்காமல் பயன்படுத்த முடியாது. அது திறக்காமலே உள்ளது. எதிர்தாக்குதலின் போது இருதரப்பிலும் சுடும்போது எப்படி இவர்களின்  ஆயுதத்தைத் திறக்காமலே சுட்டிருப்பார்கள். து சந்தேகத்தை எழுப்புகிறது.”

மேலும் சம்பவம் உண்மையோ, பொய்யோ, நடந்து முடிந்துவிட்டது. முடிந்த பிறகு சட்டப்படி அந்த வாகனத்தின் என்ன உள்ளது என்று டதனை செய்ய வேண்டும். முழு உடலையும் சோதனை செய்ய வேண்டும் அவ்வாறு சோதனை செய்யும் போது இஷ்ரத்தின் அடையாள அட்டை கிடைத்ததாக காண்பித்தார்கள். அதில் பயோடேட்டாவில் முகவரி இருந்ததால் இஷ்ரத் இங்கிருக்கும் பெண் என்றும் அறிவித்தார்கள். டைரி கிடைத்ததாக ஏன் அப்பொழுது அறிவிக்கவில்லை.

நான்கு நாட்களுக்கு பிறகு ஏன் அறிவிக்கிறார்கள். (அடையாள அட்டையை அறிவித்தவர்கள், டைரியை ஏன் அறிவிக்கவில்லை) அதில் சந்தேகங்கள் பல எழுகிறது. யாரையோ வைத்து எழுதக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

குஜராத் போலீஸ் கூறுகின்றது 6 மாதங்களுக்கு முன்னரே எங்களுக்கு தகவல் கிடைத்தது இவர்களைப்பற்றி. IBயை சேர்ந்தவர்களும் 6 மாதங்களுக்கு முன்னரே தகவல் தந்துள்ளார்கள் என்று. பின்னர் ஏன் 6 மாதங்கள் முன்னரே கைது செய்யவில்லை?

அதாவது சம்பவம் அல்லது கொலை செய்யும்போது தான் பிடிக்க வேண்டுமா? கொள்ள வேண்டுமா? இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் I.B. கூறுகிறது 6 மாதங்களுக்கு முன்னரே இதுபோல் ஒருதகவலை கிரைம் பிராஞ்சிடம் கூறவில்லை என்று. I.B. மறுக்கும் போது குஜராத் போலீஸிடம் என்ன தகவல் உள்ளது.

குஜராத் போலீஸ் அடையாள அட்டை, டைரி கிடைத்தது என்று கூறுகிறார்கள். சரி, இதெல்லாம் சம்பவம் நடந்து முடிந்த பிறகு கிடைத்தது. சம்பவத்திற்கு முன் என்ன தகவல் உங்களிடம் உள்ளது.

குஜராத் போலீஸ் கூறுகிறது இவர்கள் குஜராத் முதலமைச்சர் மோடியை கொலை செய்ய வந்தவர்கள் என்றும் இவர்கள் லஷ்கர் இ தொய்பா என்றும் அதில் இரண்டு பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் கூறுகிறது. இந்த தகவலுக்கு இதுவரை எந்தவித ஆதாரமும் தரவில்லை.

மனித உரிமை கமிஷன் குஜராத் அரசாகத்திற்கு 6 வாரங்களில் இந்த சம்பவம் குறித்து அறிக்கை தர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அது 6 வாரங்கள் நடைபெறும். இதற்கு முன்னே நாங்கள் எல்லா தகவல்களையும் சமர்பிக்க உள்ளோம். பொதுநல வழக்கு ஒன்றையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளோம்.. அதற்கு தேவையான தகவல் முழுமையடைய வில்லை.

இங்கிருக்கும் மக்களுக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் ஒருமுறை போஸ்ட்மார்டம் செய்யக்கூருகிரார்கள். உடலை அடக்கம் செய்யும் முன்னே பெண்கள் இஷ்ரத்தின் உடலை குளிக்க வைக்கும் போது மறைவிடத்தில் குண்டுபட்ட காயம் இருப்பதாக கூறினார்கள். இதனால் ஏற்கனவே கற்பழிக்கப்பட்டு அது தெரியாமல் இருக்க அந்த இடத்தில் சுடப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது மேலும் காரும் இஷ்ரத் அமர்ந்திருந்த கோணத்தில் அந்த இடத்தில் சுட வாய்ப்பு குறைவு. இது எப்படி நடந்தது.

மேலும் மக்கள் கூறுகிறார்கள் இஷ்ரத் சனிகிழமை புறப்பட்டாள். அன்று குஜராத் போலீஸ் வாகனத்தை மும்ப்ரா பகுதியிலே கண்டதாக கூறுகிறார்கள். குஜராத் வாகனம் இங்கே வர காரணம் என்ன? மேலும் நேரில் குஜராத் வாகனத்தை நான் கண்டேன் இந்த நம்பர் வண்டிதான் என்று கூற யாரும் முன்வரவில்லை. (இஷ்ரத்தைப் பார்த்த சாட்சி உள்ளது) அப்படி யாரும் இருந்தால், இஷ்ரத்தை போலீஸ்காரர்கள் கடத்திச் சென்றுவிட்டார்கள் என்று சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். கடத்திச் செல்ல வாய்ப்புகளும் உள்ளன.

இந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை யார் எடுக்கின்றார்கள்?

என் தலைமையில் குழு ஒன்றை உருவாக்கி இருகின்றோம்.

இந்த சம்பவம் குறித்து வேறு ஏதாவது கூற விரும்புகிறீர்களா?

இந்த எதிர்தாக்குதல் என்பது பொய்யானது. சம்பவத்திற்குப் பிறகு குஜராத் கிரைம் பிரான்ச்சை சேர்ந்தவர்கள் வந்து ஜாவிதைப் பற்றி விசாரித்திருகின்றார்கள். அதில் ஜாவித் என்பவர் இங்கே சில காலம் இருந்ததாகவும் அவன் மீது சிறு சிறு  குற்றங்கள் பதிவாகி உள்ளதை எடுத்துள்ளார்கள். அடிதடி மற்றும் மிரட்டி வீடு காலி செய்ய முதலமைச்சர் மோடியை கொலை செய்யத் திட்டம் தீட்டினார்கள் என்பதெல்லாம் நம்ப முடியவில்லை.

-முபையிலிருந்து முகர்ரம்

நடந்தது என்ன?

இஷ்ரத் ஜஹானின் தாயார் ஓர் கேள்வியைக் கேட்கின்றார்.

அது, அவர்களுக்கு என்னுடைய மகள் தீவிரவாதி எனத் தெரிந்திருந்தால் கைது செய்திருக்கலாமே என்பது தான் தன அந்தக் கேள்வி!

இந்தக் கேள்வியில் பல பொருள்கள் இருக்கின்றன.

அவை, ஆறுமாதமாக பின் தொடர்ந்து செல்லுபவர்கள் அவளைக் கைது செய்திருந்தால் அவள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். உண்மைகள் பல வெளிச்சத்திற்கு வரும். அத்தோடு அவள் உயிரோடு கிடைத்திருப்பாள். இது போன்ற அதிர்ச்சியிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்பட்டிருப்பர்கள்.

தெஹெல்கா என்ற பத்திரிகையின் கண்டுபிடிப்புகள் பல அதிர்ச்சிகளைத் தருகின்றன. வேறு விதமாகச் சொல்லுகின்றது.(TEHELKA,JULY3, 2004)

இஷ்ரத் ஜகானையும் இன்னும் ஜாவிதையும் பம்பாயிலேயே கைது செய்துவிட்டதாகவும் அல்லது இருவரையும் கைப்பற்றி விட்டதாகவும் பின்னர் அவர்கள் அஹமதாபாத் அழைத்துச் சென்றதாகவும் கூறுகின்றது. தெஹெல்கா கண்டுபிடிப்பு கைது செய்த அன்று, முதல் தகவல் அறிக்கையும் (FIR) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த (FIR) முதல் தகவல் அறிக்கை பின்னர் கிழிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் என  முத்திரைக் குத்தப்படுகின்ற ஜோசிம் ரானா என்பவர்கள் பதினைத்து நாட்களுக்கு முன்னரே கைது செய்யப்பட்டுள்ளார். தெஹெல்கா குழுவினர். (ADDITIONAL COMMISIONER POLICE) அஹ்மதாபத்தின் காவல் துறை இணை ஆணையாளர் DG.வன்ஜாரா (D.G.VANJARA) அவர்கள் கேட்ட பொது அவர் இப்படி எரிந்து விழுந்திருக்கின்றார்.

ஒன்றிலோ நான் சொல்வதை நம்புங்கள் அல்லது உங்கள் வழியில் நீங்கள் செல்லுங்கள். நீங்கள் FIR என்ற முதல்தகவல் அறிக்கையைப் பாத்தீர்களா?

ஆனால் தெஹல்கா தனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இஃது உண்மை என சாதிக்கின்றது.

அதுமட்டுமல்ல, உடனேயே குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் தொடர்பு கொண்டுள்ளது தெஹெல்கா. அதற்கு அமித்ஷா இப்படிப் பதில் கூறியுள்ளார்:

தயவு செய்து நான் சொல்வதை கேளுங்கள். நீங்கள் சொல்வதைப் போல இந்துவும் நடக்கவில்லை. முதல்தகவல் அறிக்கையை நீங்கள் பார்த்தீர்களா” எனக் கேட்டதற்கு “என்னுடைய பணி புதல் தகவல் அறிக்கையைப் பார்பதல்ல” எனப் பதில் சொல்லி இருகின்றார்.

இருந்தாலும் ஒரு வாக்குறுதியையும் வழங்கி இருக்கிறார். அது, “நான் அஹமதாபாத் காவல் துறை ஆணையாளர் பாண்டே அவர்களை உடனேயே உங்களிடம் பேசச் சொல்லுகின்றேன் என்பதே!

ஆனால் காவல்துறை ஆணையாளர் பாண்டே அவர்களை பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பின்னரும் ஒரு முறை கூட அவர் தொலை பேசி இணைப்பில் வரவில்லை.

காவல்துறையினர் 53 முறை துப்பாக்கி சூடுகள் நடந்ததாகத் தெரிவிகின்றார்கள். அதில் காரில் வந்தவர்கள் 37 முறை சுட்டதாகச் சொல்கிறார்கள். காவல்துறையினர்  16 முறை சுட்டதாகக் கூறுகின்றனர். காரில் வந்தவர்கள் (?) 37 முறை சுட்ட பின்னரும் காரின் முன் கண்ணாடி சேதமடையவில்லை. ஒரு காவல் துறை அதிகாரி கூட காயமடையவில்லை.

குஜராத்தில் இது போன்று அதாவது மோடி போன்றவர்களை கொலைசெய்ய சதி நடந்திடாமல் தடுத்திடவும் அதையும் மீறி தாக்குதல் நடந்தால் எதிர்தாக்குதல்களை நடத்திடவும் ஒரு தனி காவல்படையே இருக்கின்றது. அந்தப் படையின் பெயர் ANTI TERRORISM SQUAD (ATS) ‘தீவிரவாத எத்ரிப்புப் படை’ இந்தப் படை. உளவுத்துறையின் கீழ் இயங்கும் ஒருபடை.

காரில் வந்தவர்கள் உண்மையிலேயே தீவிரவாதிகளாக  இருந்திருந்தால் அவர்களை இந்தப் படை  தான் எதிர்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் இந்த நான்கு போரையும் கொலைசெய்யும் பணி அல்லது எதிர் தாக்குதலில் அழிக்கும் பணி சாதாரண குற்றவியல் (CRIME BRANCH) காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றவியல் காவல் படையில் அடிமுதல் முடிவரை அரசியல்வாதிகளின் பரிந்துரைகளின் பேரில் தான் ஆட்கள் நியமிக்கப்படுகின்றார்கள். காவல்துறையின் இந்த அமைப்பை குஜராத்தைச் சார்ந்தவர்கள் ஓர் அரசியல் அமைப்பாகத்தான் பார்க்கிறார்கள்.

தெஹெல்கா (என்ற பத்திரிகையின் புலனாய்வு குழு) குஜராத்தின் தீவிரவாத எதிர்ப்பு படையிடம் “இந்த எதிர்த்தாக்குதலை நீங்கள் ஏன் செய்யவில்லை” எனக் கேட்டதற்கு “நாங்கள் அதை செய்யமாட்டோம் என்று சொல்லிவிட்டோம்” என பதில் சொல்லி இருக்கிறார்கள். (TEHELKA, JULY 3, 2004)

பிறிதொரு மகத்தான உண்மை ன்னவேனில், எல்லோரும் சொல்வதைப் போல இந்த நான்கு பேரும் ஒரு இண்டிகா காரில் அங்கே செல்லவில்லை. இதுவும் தெஹல்காவின் கண்டுபிடிப்பில் வந்திருக்கின்றது. இதற்கு ஆதாரமாக (RELIABLE SOURCES) நம்பத்தகுந்த வட்டாரங்கள் எனக் கூறுகின்றது தெஹல்கா.

தெஹல்காவின் கணிப்பின் படியும் விடியல் வெள்ளி, இன் குலாப், மிட்டே ஆகிய பத்திரிகைகள் மேற்கொண்ட ஆய்வின்படியும், எதிர்த்தாக்குதலில் கொலை செய்யப்பட்ட நான்கு பேரில் இரண்டு பேர் வெகு நாட்களுக்கு முன்னரே காவல்துறையின் கைகளுக்கு வந்துவிட்டார்கள்.

அவர்களில் இஷ்ரத் ஜஹான் ஷேஹ்வும் ஜாவித்தும் ஜூன் 11ம் நாளுக்குப் பின்னர் தான் குஜராத் அழைத்துச் செல்லப் பட்டிருக்கின்றார்கள். நீல நிற கார் பின்னரே எடுத்து வரப்பட்டுள்ளது.

காவல்துறையின் கட்டுப் பாட்டில் இருந்தால்தான் இஷ்ரத் ஜஹான் தன்னுடைய வீட்டிற்கு போன் செய்ய இயலவில்லை. இதனால்தான் ஜூன் 11ம் நாளே மோடியைக் கொலை செய்ய அஹமதாபாத்  வந்தவர்கள் 15 ஆம் தேதிவரை எங்கே தங்கினார்கள் என்பதை காவல்துறையினராலும் சொல்லிட இயலவில்லை. ஆக கடத்தி வந்து கொலை செய்துவிட்டதாகத் தெரிகின்றது.  இனி வரும் புலனாய்வுகளில் பல உண்மைகள் வெளிவரும்.

பாகிஸ்தானைச் சார்ந்தவர்கள் இருவர் (ஜோஹர், ரானா) எனக் கூறி வந்தது காவல்துறை நேற்றுவரை.  இன்றுவரை அவர்களின் உடல்களை யாரும் எடுத்துவரவில்லை. இப்போது அவர்களை அடியாளம் காண்பதில் பொது மக்கள் தாம் உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளதாக சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆசிப் கூறியுள்ளார்.

ஆக, அவர்கள் பாகிஸ்தானியர் என்றே கூற்றும் ஐயதிர்கிடமானதே!

மொத்தத்தில் மோடியை ஹீரோ ஆக்கி அவருடைய பதவியை காத்திட நடத்திய நாடகம் என்ற வாதமே வலுப்பெறுகின்றது. வழக்கறிஞர் முச்சாலா சொன்னது போல் ஒரு உண்மை அறியும் குழு முஸ்லிம்களிடம் நிரந்தரமாக தேவைப்படுகிறது.

முஸ்லிம்கள் குஜராத்தில் தான் உயிரோடு வாழ இயலவில்லை என்பது மட்டுமல்ல; பக்கத்து மாநிலமான மராட்டியத்திலும் அவர்கள் மோடிகலாக் விட்டு வைக்கப்படவில்லை.

நியாயமான சந்தேகங்களும் கேள்விகளும் 

குஜராத் காவல்துறையின் (போலீஸ்) உள்ளேவரும் எல்லா வாகனங்களும் சோதனை செய்துவிட்டுத்தான் உள்ளே அனுமதிப்பார்கள் என்கிறார்கள். பின்னர் எப்படி அஹமதாபாத் வரை இந்த வாகனத்தை விட்டார்கள்.

ஊர்விட்டு ஊர்வருவோர் தங்கும் விடுதிகளில் தங்குபவர்களைப் பற்றிய தகவல்களையும் நிரந்திரமாக கடுமையான பரிசோதனைகளுக்குள்ளாகி  வருகின்றனர். க்றிப்பாக பெண்களோடு தங்குபவர்களைப் பற்றிய தகவல்களையும் விடாமல் விசாரிபார்கலாம். (INDIAN EXPRESS AHMADABAD 26.04.2004)

நிலைமை இப்படி இருக்க, இஷ்ரத் சில ஆண்களோடு சென்றாள், தங்கினாள், வந்தாள், என்பவை எல்லாம் எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்ள முடிந்தவைகளாக இருக்கின்றன?

குஜராத் காவல்துறை இன்னொன்றையும் கூறுகிறது, நாங்கள் பெண்களோடு யார் வந்தாலும் அவர்களுக்கிடையேயுள்ள உறவுகளை தீர விசாரிக்காமல் விடமாட்டோம் என்கின்றார்கள். (INDIAN EXPRESS 26.04.2004)

அவ்வாறு அவள் தங்கி இந்தாள் காவல் துறையினரின் கண்காணிப்பின் கீழ் வந்திருப்பாள். ஆனால் காவல்துறையினர் இப்போதுதான் அவளைப்பற்றி ஆய்வுகளை நடத்துகின்றன எனக் கூறுகின்றது.

இஃது முரண்பாடாக இல்லையா?

காவல்துறையினர் அஹமதாபாத் முஸ்லிம்களின் அல்லது அஹ்மதாபத்தை சார்ந்த ஓரிருவரின் உதவிகளின்றி இவை நடந்திருக்க  இயலாது என்று அழுத்தமாக கூறுகின்றனர்.

இஷ்ரத் ஜஹானும், ஜாவித் போன்றவர்களும் அடிக்கடி குஜராத் சென்று வந்ததாகக் கூறும் காவல் துறையினரால் ஏன் இன்றுவரை அவர்களுக்கு உதவிய அஹமதாபாத்தைச் சார்ந்தவர்களை கண்டுபிடிக்க இயலவில்லை.

பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கண்டு பிடித்துவிட்டதாகப் பீற்றிக் கொள்ளும் குஜராத் காவல்துறையினரால் இன்னும் அகமதாபாத் (LOCAL) தொடர்பு கண்டுபிடிக்க இயலவில்லை?

இஷ்ரத் ஜஹானின் நடவடிக்கைகளை வெகு நாள்களாகக் கவனித்து வருகிறோம் என்பது காவல்துறையின் வாதம்.

ஆனால் அவள் கொலை செய்யப்பட்டு சுமார் ஒருவாரம் கழித்துத்தான் அவள் B.Com மாணவியல்ல. அவள் இரண்டாம் ஆண்டு B.Sc படிகின்றால் என்பதைக் கண்டு பிடித்திருக்கின்றார்கள்.

இதில் இவர்கள் காவல்துறையினர் அவள் படித்த குருநானக் கல்லூரிக்குச் சென்று வணிகவியல் என்ற பி.காம் மாணவி என தகவல் தர குருநானக் கல்லூரி முதல்வர், டாக்டர் அஜித்சிங் முதலில் வணிகவியல் (B.Com) தொடர்பான ஆவணங்களையே தேடி இருகின்றார். அங்கு பெயர் கிடைக்காததால்தான் B.Sc விஞ்ஞான படிப்பு ஆவணங்களைத் திரட்டி அவள் B.Scல் பொளதீகம், கணிதம், புள்ளி விபரஇயல் ஆகிய பாடங்களைச் சிறப்பு பாடங்களாக எடுத்துப் படித்துள்ளாள்.

அவளது வருகைப் பதிவு (ATTENDANCE) மிகவும் நன்றாகவே இருகின்றது என்கிறார் கலூரி முதல்வர். (IE. AHAMADABAD 26.04.2004)

தீவிரவாத அமைப்பை அவள் சார்ந்தவளாக இருந்தால் என்பதை பல மாதங்களுக்கு முன்னரே தெரியும் எனக் கூறும் காவல் துறையினரின் கூற்றுகள் எந்த அளவுக்கு உண்மை என்பதை நாம் சந்தேகப்படாமலிருக்க இயலவில்லை.

கிடைக்கும் தகவலின் அடிப்படையில் இஷ்ரத் ஜஹான் தன் குடும்பத்தின் வருமானத்தை அதிகரிக்கச் செய்ய வழிகளைத் தேடி இருகின்றார். அதில் ரஷீத் அன்சாரி என்பவர் உதவி செய்ய முன் வந்துள்ளார். அழகு சாதனங்களின் விற்பனையின் இறங்கி இரண்டாயிரம் ரூபாய் வரை சம்பாதித்துமிருக்கிறாள்.

இதற்காக அவள் வெளியே போவதும் வருவதும் வழக்கமாக இருந்திருக்கின்றது.

இப்படி ஒரு பெண் வெளியே பொய் வருவதைப் பற்றி விசாரித்த பொது, அஃதொன்றும் மும்ப்ராவில் புதியதல்ல என்கிறார்கள்.

இஷ்ரத்தை வியாபார உலகோடு தொடர்புப்படுத்திவிட்ட ரஷீத் அன்சாரி இவர்தான் இஷ்ரத்தை ஜாவித் குலாம் முஹம்மத் ஷேஹ் என்ற பிரனேஷ்குமாரோடு அறிமுகப்படுத்திவிட்டாக கூறுகிறார்கள்.

ஆறு மாதங்களாக இஷ்ரத்தை பின் தொடர்ந்து வருவதைக் கூறும் காவல்துறையினர் இந்த நபரை முன்கூட்டியோ அல்லது மோடியை கொலை செய்யப்ரப்படும் போதோ  அல்லது இந்த நான்குபேரும் கொலை செய்யப்பட்டவுடனேயே கைது செய்யவில்லை.

மிகவும் காலதாமதாகவே கைது செய்திருக்கின்றார்கள். அல்லது அழைத்துச் சென்றிருகின்றார்கள். இதற்கான காரணம் என்னவோ?

இதிலும் ஒரு உண்மை மேலும் தெளிவாகின்றது. கொலையை நடத்தி முடித்தபின் ஆதாரங்களைத் தேடுகின்றார்கள் என்பதே இது.

இனி இந்த ரஷீத் அன்சாரியின் வாக்குமூலம் வழியாகத்தான் காவல் துறை தப்பித்துகொள்ளும் என்கிறார்கள் (மும்பை) பம்பாயைச் சார்ந்த பத்திரிகையாளர்கள்.

இந்தப் படுகொலையில் இன்னொரு நபரும் கொலை செய்யப்பட்டார். அவர்தான் ஜாவித் குலாம் முஹம்மது ஷேஹ். இவருடைய உடலைப் பெற்றுவர அவருடைய மனைவி சஜிதாவின் தந்தை அப்துல் ஹமீது இனாம்தார் என்பவரும் அவரது உறவினர் இக்பால் ஆகியோரே சென்றிருக்கின்றார்கள் .

அவர்கள் ஜாவித்துடைய உடலை எடுத்து அங்கேயே அடக்கம் செய்துள்ளார்கள். காரணம் உடல் எடுத்துவரும் நிலையில் இல்லை என்பதே! இதனை காவல்துறையினரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஆனால் அடக்கம் முடிந்தபின் இதற்காக் சென்றவர்களை வீடு திரும்ப விடமாட்டோம் எனக்கூறி விட்டார்கள் காவல்துறையினர். அவர்களிடமிருந்து எடுக்க வேண்டிய தகவல்களை எடுக்காமல் விட மாட்டோம் என சூளுரைக்கின்றார்கள் கிரைம் பிராஞ்சு என்ற குஜராத் திருவில் துறையினர்.

இதுவும் செய்துவிட்ட கொலையை நியாயப்படுத்திட முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் காவல் துறையினர் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

ஜாவிதின் மனைவி சாஜிதா இவரை பலமுறை வந்து தொந்தரவு செய்திருகின்றார்கள். காவல்துறையினரிடம் பேச அவர் மறுத்துவிட்டார்

இதனைப் பயன்படுத்திக் கொண்டு அவர் அதை சொன்னார் இதை ஒத்துகொண்டார் என்றெல்லாம் செய்திகளைப் பரப்பிக் கொண்டிருகின்றார்கள் என்கிறார் ஜாவித்தின் தந்தை.

2004, ஜூலை மாதம் விடியல் வந்த அட்டைப்பட கட்டுரை 

மேலும் படிக்க: இஷ்ரத் ஜஹான்,

Discussion1 Comment

  1. மிகவும் அருமையான பதிவு, அல்லாஹ் உங்களுக்கு இதற்குறிய பலனை தந்தருள்வானாக.