மோடியை திருடன் என விமர்சித்த கருத்து: மன்னிப்பு கேட்ட ராகுல் காந்தி!

0

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது, மோடியை கடுமையாக விமர்சித்தார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதியே கூறிவிட்டதாகவும் அவர் பேசினார்.

ராகுல் காந்திக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து மோடியை திருடர் என்று கூறியதற்காக மன்னிப்பு கோரி புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ஒப்புக் கொள்வதாகவும், அதற்கு கால அவகாசம் தேவை என்றும் ராகுல் காந்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரும் மே 6 ஆம் தேதி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர்.

Comments are closed.