மோடியை ‘TIME’ இதழில் விமர்சித்து எழுதியவர் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்: பாஜக குற்றச்சாட்டு!

0

பிளவுவாதிகள் தலைவர் என்று, நரேந்திர மோடியை அமெரிக்காவின் ‘டைம்’ இதழ் குறிப்பிட்டு, அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டுள்ளதன், பின்னணியில் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் இருப்பதாக குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது பாஜக.

இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா இன்று டெல்லியில் பத்திரிக்கையாளர்களிடம்  கூறுகையில், “இந்த கட்டுரையை எழுதிய பத்திரிக்கையாளர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆதிஷ் தஷீர் என்பவர். மறைந்த பாகிஸ்தான் அரசியல்வாதியும் தொழிலதிபருமான சல்மான் தஷீர் மற்றும் இந்திய பத்திரிகையாளர் தவ்லீன் சிங் ஆகியோரின் மகன் தான் இந்த கட்டுரையை எழுதிய ஆதிஷ் தஷீர்.” என்று கூறியுள்ளார்.

 

Comments are closed.