மோடி, அமித்ஷாவிற்கு நெருக்கமான அதிகாரி சி.பி.ஐ. தலைவராக தேர்வு?

0

நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவிற்கு மிக நெருக்கமானவராக கருதப்படும் ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் அஸ்தானா என்பவரை சி.பி.ஐ யின் புதிய தலைவராக மத்திய அரசு நியமித்துள்ளது. இது தற்போதைய சி.பி.ஐ. இயக்குனர் ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகேஷ் அஸ்தானா தற்போதைய சி.பி.ஐ இயக்குனர் அணில் சின்ஹாவால் சி.பி.ஐ யின் கூடுதல் இயக்குனராக இவ்வருடம் ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். இந்த ராகேஷ் அஸ்தானா தான் பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டும், முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்பட்ட குஜராத் கலவரத்துக்கு காரணமாக கூறப்படும் கோத்ரா ரயில் எரிப்பை “நன்றாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட சதிச் செயல்” என்று கூறியவர்.

மேலும் இவர் பாட்னாவில் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய போது மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவை கைது செய்தார். சி.பி.ஐ யின் கூடுதல் இயக்குனராக விஜய் மல்லையாவின் வங்கி மோசடி வழக்கையும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் வழக்கையும் விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுப் பிரிவை வழிநடத்தி வந்தார்.

இவர் சி.பி.ஐ. இல் உயர் பதவி வழங்கப்படும் இரண்டாவது குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அருண் குமார் ஷர்மா என்பவர் சி.பி.ஐ இன் இணை இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவரும் மோடி மற்றும் அமித் ஷாவிற்கு மிக நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

முக்கிய ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சி.பி.ஐ அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்யக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை புரம்தளிவிட்டு கடந்த புதன் கிழமை சி.பி.ஐ.யின் சிறப்பு இயக்குனர் ஆர்.கே.டட்டா என்பவரை உள்துறை அமைச்சகத்தின் வேறு ஒரு பிரிவிற்கு மத்திய அரசு மாற்றியது. இவர் நிலக்கரி ஊழல், 2ஜி அலைகற்றை ஒதுக்கீடு ஊழல் ஆகிய வழக்குகளை விசாரித்து வந்தவர். இவர் இடம் மாற்றப்படாமல் இருந்திருந்தால் அணில் சின்ஹா வின் வெள்ளிகிழமை ஓய்வு பெற்ற பிறகு இவரே சி.பி.ஐ யின் இயக்குனராக பொறுப்பேற்றிருப்பார். இது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது ஆர்.கே.டட்டா அஸ்தானா வை விட மூன்று வருடம் மூத்த அதிகாரி. அப்படி இருக்க மிக குறிகிய காலத்தில் செய்யப்பட்ட இட மாற்றங்களும் அறிவிப்புகளும் பா.ஜ.க தலைவர்களுக்கு நெருக்கமான அஸ்தானாவை சி.பி.ஐ.தலைவராக தேர்ந்தெடுப்பதற்கு தோதுவாக ஏற்படுத்தப்பட்டவைகளா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

சி.பி.ஐ. யின் தலைவர் பதவிக்கு தகுதியான ஐ.பி.எஸ். அதிகாரிகளில் இருந்து சிறந்த அதிகாரியை சி.பி.ஐ. தலைவராக தேந்தேடுக்கும் குழு இன்னும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழுவில் இந்திய பிரதமர், எதிர்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்குவர்.

Comments are closed.