மோடி அரசாங்கம் பிராமணியத்தை போதிக்கிறது – அருந்ததி ராய்

0

இந்து ராஷ்டிரம் என்கிற பெயரில் பிராமணியத்தை நரேந்திர மோடியின் அரசு ஊக்குவிக்கிறது, மேலும்சகிப்புத்தன்மையின்மை என்கிற வார்த்தை ஒருவரை அடித்து கொல்லுதல், உயிரோது எரித்தல் போன்ற கொடூரங்களால் சிறுபான்மையினரை தற்பொழுது பீடித்திருக்கும் பயத்தினை ஒப்பிடும்போது மிகச் சிறியதாகும் என்று பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் கூறியுள்ளார்.

புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ராய் கூறுகையில் ” பா.ஜ.க. அரசு சமூக சீர்திருத்தவாதிகளை சிறந்த இந்துக்களாக காட்டமுனைகிறது. அம்பேத்கரும் ஒரு சிறந்த சீர்திருத்தவாதிதான். ஆனால் அவர் இந்து மதத்தை விட்டு வெளியேறிவிட்டார்.”என்று கூறினார்.

மேலும் ” வரலாறு மாற்றியமைக்கப்படுவது மட்டுமல்லாமல், தேசிய நிறுவனங்கள் அனைத்திலும் பா.ஜ.க  தங்களின் ஆதரவாளர்களை பணியமர்த்தி அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் எடுக்கப்படுகின்றது” என்று அவர் கூறியுள்ளார்.

சமூக சீர்திருத்தவாதி மஹாத்மா ஜோதிபா புலே வின் பெயரில் வழங்கப்பட்ட விருதினை பெற்றுக்கொண்ட சமயத்தில்இந்த கருத்தை அவர் கூறினார். அருந்ததி ராய் இந்த விருதைப் பெறும்போது ABVP இயக்கத்தைச் சார்ந்தவர்கள் கோஷம்எழுப்பினார்கள். அருந்ததி ராயை தேச விரோதி என்றும், பாகிஸ்தான் ஆதரவாளர் என்றும், இந்திய ராணுவத்திற்குஎதிரானவர் என்றும் கோஷம் எழுப்பினர். மேலும் அருந்ததிராய் அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டார்குறிப்பிட்டனர்.

Comments are closed.