மோடி ஆட்சியில் அதிகரிக்கும் வேலை வாய்ப்பின்மை!

0

மோடி ஆட்சியில் அதிகரிக்கும் வேலை வாய்ப்பின்மை!

விவசாயிகளின் தற்கொலையைப் போலவே வேலை வாய்ப்பின்மை மூலமும் இந்தியாவில் தற்கொலைகள் அதிகரிக்கிறதா? ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன் மூன்று பட்டதாரி இளைஞர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலைச் செய்து கொண்டதற்கு வேலையில்லாமையே காரணம் என்று காவல்துறை கூறுகிறது. தற்கொலை செய்ய முடிவெடுத்த ஆறு பேரில் இருவர் ரயில் வந்தபோது பின்வாங்கியுள்ளனர். இவர்கள்தான் தற்கொலைக்கான காரணத்தை வெளிப்படுத்தினர். ஒருவருக்கு காயமேற்பட்டது. உயர்ந்த நம்பிக்கைகளுடன் வளரும் இளைஞர்களை வேலை வாய்ப்பின்மை வன்முறை மற்றும் கலவரத்தை நோக்கி திருப்பும் வாய்ப்பு இருப்பதாக ஜாமிஆ மில்லியா சமூகவியல் துறை தலைவர் நேசத் கைஸர் கூறுகிறார்.

வேலை வாய்ப்பின்மை மூலம் தற்கொலை அதிகளவில் நடப்பதாக சுவிட்சர்லாந்தின் சூரிச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய உலகளாவிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. வேலையில்லாதவர்களின் மத்தியில் மனரீதியான பிரச்சனைகளும், நிலையற்ற உணர்ச்சியும், ஏமாற்றமும், தன்னம்பிக்கை இழப்பும் அதிகரித்து வருவதாக மனோதத்துவ நிபுணர்களும் கூறுகின்றனர். இவைதான் வேலையில்லாதவர்களை தற்கொலைக்கு தூண்டுகின்றன. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.