மோடி ஆட்சி என்றாலே ”பசு குண்டர்கள், கும்பல் வன்முறை” தான்- உவைஸி

0

மோடியின் ஆட்சி என்றாலே நினைவுக்கு வருவது ‘பசு குண்டர்கள், கும்பல் வன்முறை’ தான் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் உவைஸி கூறியுள்ளார்.

மோடி ஆட்சிக்கு வந்ததும் பசு வதை, மாட்டிறைச்சி வன்முறைகள் போன்றவை எதிர்க்கட்சிகள் மற்றும் உச்சநீதி மன்றத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்தது.

தற்போது அசாமில் மாட்டிறைச்சி விற்பனை செய்த முஸ்லிம் முதியவர் ஒருவரை ஒரு கும்பல் அடித்து துன்புறுத்தியது. இது தொடர்பாக வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகின.

இதுகுறித்து ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 68 வயது முதியவர் மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்தார் என்பதற்காக ஒருகும்பல் அடித்து துன்புறுத்தியது கொடூரமான செயல். பல ஆண்டுகளாக அவர் மாட்டிறைச்சி விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது அவரை குண்டர்கள் தாக்கி உள்ளனர். அவருக்கு வலுக்கட்டாயமாக பன்றி இறைச்சியை வாயில் திணித்துள்ளனர். அவர்கள் மனிதர்களாக இருக்கக்கூட தகுதியில்லாதவர்கள், அவர்கள் மிருகங்கள்.  மோடி பிரதமராக இருந்த ஒட்டுமொத்த வாழ்க்கையில் இதை தடுக்க முடியாமல் போனது பெரும் சோகம்.

மோடியின் ஆட்சியில் நினைவுக்கு வருவது என்னவென்றால், அவரது ஆட்சி காலத்தில் நடைபெற்ற கும்பல் வன்முறை, பசு குண்டர்கள் நடத்தும் வன்முறை போன்றவைதான் நினைவுக்கு வரும்.

மேலும், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மோடி மோசமாக தோற்பார் என்றும் பாஜக எதிர்க்கட்சி வரிசையில் அமரும் என்றும் தெரிவித்தார்.

Comments are closed.