மோடி ஈர்ப்பு மிக்க தலைவராக விளங்குகிறார்: புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்!

0

அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருக்கும் ரஜினிகாந்த் இன்று காலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்: “இந்தியாவில் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைத் தவிர நாடு முழுவதும் மோடி  அலை வீசி உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் மோடி எதிர்ப்பு அலை வீசி உள்ளது.

தேசிய அளவில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் போன்ற தலைவர்களுக்கு அடுத்து மக்களை ஈர்க்கும் கரிஷ்மா மிக்க தலைவராக மோடி விளங்குகிறார். தமிழகத்தில் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் , கலைஞர், ஜெயலலிதா போன்றோருக்கு அந்த கரிஷ்மா இருந்தது. இப்போது தேசிய அளவில் மோடிதான் ஈர்ப்பு மிக்க தலைவராக விளங்குகிறார்”.

தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை ஏன் வீசியது என்ற கேள்விக்கு, “தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நீட் போன்ற பிரச்சினைகளோடு எதிர்க்கட்சியினரின் சூறாவளி பிரச்சாரமே மோடி எதிர்ப்பு அலையை உருவாக்கியது. அரசியலில் ஒரு அலை என்று உருவாகிவிட்டால் அதில் இருந்து யாரும் தப்ப முடியாது” என்று கூறினார். மேலும், “காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தை அறிவித்த மத்திய அமைச்சர் கட்கரிக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்” என்றும் குறிப்பிட்டார்.

மேலும், “காங்கிரஸ் பழமையான ஒரு கட்சி. அதில் இருக்கும் மூத்த தலைவர்களை இளைஞரான ராகுல் காந்தி இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும். தேர்தல் தோல்விக்காக ராகுல் காந்தி பதவிவிலக தேவையில்லை” என்றும் குறிப்பிட்டார் ரஜினிகாந்த்.

Comments are closed.