மோடி காவலாளி இல்லை: களவாணி- மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

0

சேலத்தில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர். கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் பொன். கவுதம சிகாமணி ஆகியோரை ஆதரித்து ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொண்டனர் . அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், மோடி தன்னை ஒரு ஏழை தாயின் மகன் என கூறுகிறார். அவ்வாறு ஏழை தாயின் மகனாக இருந்தால் விவசாயிகளை பற்றி கவலைப்படாமல் இருந்திருப்பாரா என கேள்வி எழுப்பினார்.

தன்னை காவலாளி என சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடி, ஊழல்வாதிகளுக்கு காவலாக உள்ளார் எனவும், அவர் காவலாளி இல்லை, களவாணி எனவும் விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், கோடீஸ்வரர்களை மட்டுமே சிந்தித்துக்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, ஏழைகளைப் பற்றி அவருக்கு கவலையில்லை எனவும் குற்றம் சாடினார்.

Leave A Reply