மோடி தொழிலதிபர்களின் கடனை அடைப்பதில் தீவிரமாக உள்ளார்: ராகுல் காந்தி

0

மோடி, தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியுதவி செய்தவர்களுக்கு தனது கடனை திருப்பி செலுத்துவதில் தீவிரமாக உள்ளார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

2014 தேர்தல் வாக்குறுதியின் போது, தங்கள் ஆட்சி வந்தால் விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று மோடி கூறியதை நினைவு படுத்திய ராகுல் காந்தி, மோடிக்கு விவசாயிகளின் கடனை குறித்து கொஞ்சம் கூட அக்கறை இல்லை என்று கூறியுள்ளார்.

15 லட்ச ரூபாய் ஆடை அணியும் மோடி நாட்டு மக்களுக்கு வாக்களித்த 15 லட்ச ரூபாய் மக்களின் வங்கிக் கணக்கில்  வந்து சேர்ந்துவிட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments are closed.