மோடி புகழ் பாடும் காந்தி அருங்காட்சியகம்

0

தேசத் தந்தை காந்தியடிகளின் பெயரால் அருங்காட்சியகத்தை நிர்மாணித்து புகழ் பெறலாம் என்ற மோடியின் நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.காந்தியின் பெயரால் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் தன்னைக் குறித்த கேள்விகள் அடங்கிய வினாடி வினா நிகழ்ச்சி நடத்தி அருங்காட்சியகத்திற்கு வருகை தரும் பார்வையாளர்களிடம் தனது இமேஜை உயர்த்திக் காட்ட மோடி விரும்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அஹமதாபாத்தில் கடந்த ஜனவரி மாதம் ‘தண்டி குடீர்’ என்ற பெயரில் நரேந்திரமோடி அருங்காட்சியகம் ஒன்றை திறந்து வைத்தார். காந்தியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் அருங்காட்சியகம் என்று கூறியபோதிலும் காந்தியடிகளின் வாழ்க்கை தொடர்பான பொருட்கள் எதுவும் இங்கு இல்லை. காந்தியின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை காட்சிப் படுத்த எல்.சி.டி ஸ்க்ரீன் மற்றும் 3னு வசதிகள் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இவற்றில் பெரும்பகுதியும் அருங்காட்சியகம் ஏன்?எவ்வாறு நிர்மாணிக்கப்பட்டது? என்பதற்கே ஒதுக்கப்பட்டுள்ளது. எல்.சி.டிவியில் மோடியின் வீடியோ உரை மீண்டும் மீண்டும் காட்டப்படுகிறது.’எவ்வாறு நான் இந்த அருங்காட்சியகத்தை அமைத்தேன்?’என்று மோடி தனது உரையில் விளக்குகிறார். ஒரு மகான் இன்னொரு மகானுக்கு சமர்ப்பிப்பதே இந்த அருங்காட்சியகம் என்ற அறிவிப்பும் அடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இன்னொரு பலகையில் இந்த அருங்காட்சியகத்தை அமைக்க தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்ட மோடிக்கு வாழ்த்துக்கள் என்று எழுதப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் காந்திக்கு புகழ் சூட்டவா? அல்லது மோடிக்கு புகழாரம் சூட்டவா? என்று அங்கு செல்லும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அருங்காட்சியகத்தின் அடுத்த முக்கிய நிகழ்ச்சி ‘நமோ க்விஸ்’ஆகும். அதாவது மோடியின் தியாக, அர்ப்பண வாழ்க்கை குறித்து 60 கேள்விகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
கேள்விகள் இவ்வாறு அமைந்துள்ளன:
1.மோடி பயிற்சி பெற்ற சங்க் எது?(ஆப்ஷன்ஸ்:ஆர்.எஸ்.எஸ், என்.எஸ்.எஸ், வி.எஸ்.எஸ், பி.எஸ்.எஸ்)
2.மோடியை மக்கள் அறியும் இன்னொரு பெயர்?(நரேம, நமோ, நரன், நமோகர்)
3.மோடி மிகவும் அணிய விரும்பும் சட்டை எது?
4.மோடி தினமும் செய்யும் உடற்பயிற்சி எது?
5.மோடியை உலகில் சக்திமிகுந்த மனிதராக விவரிக்கும் மாத இதழ் எது?
6.மோடியின் தாய், தந்தை, மனைவியின் பெயர் என்ன?
7.மோடிக்கு எத்தனை சகோதர, சகோதரிகள் உள்ளனர்?
அடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் கேள்வி.’மக்களவை தேர்தலில் வெற்றிப் பெற்ற பிறகு மோடிக்கு அவரது தாயார் சாப்பிட அளித்தது என்ன?
இவ்வாறு செல்கிறது கேள்விகள்.
ஆடம்பர வாழ்க்கை, தொழில்மயத்திற்கு எதிரான காந்தியை அவமானப்படுத்தக்கூடிய செயல்களை மோடி அரசு செய்துள்ளது. காந்தியின் வாழ்க்கை கதையை விவரிக்கும் காட்சிகளையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து மூத்த பத்திரிகையாளர் சுஐப் தானியல் கூறுகையில்,’அதிர்ஷடவசமாக கோட்ஸே பயிற்சி பெற்ற சங்க் எது? என்ற கேள்வியை கேட்காதது ஆறுதல்’ என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.