மௌலானா சஜ்ஜாத் நுஃமானி மீதான அரசியல் வேட்டை, ல்வேறு அமைப்புகள் ஆர்பாட்டம்: நூற்றுக்கணக்கானோர் கைது

0

பத்திரிகை செய்தி

மௌலானா சஜ்ஜாத் நுஃமானி மீதான அரசியல் வேட்டை – தேசம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தின – நூற்றுக்கணக்கானவர்கள் புது தில்லியில் கைது!

லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ் காவல்நிலையத்தில் அனைத்து இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் செய்தி தொடர்பாளர் மௌலானா சஜ்ஜாத் நுஃமானிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை திரும்பப்பெறக்கோரி தேசம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டங்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் பாரத் முக்தி மோர்ச்சா ஒன்றுசேர்ந்து நடத்தின. பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். வெறுப்பு பேச்சு என்ற குற்றச்சாட்டை முன் வைத்து சஜ்ஜாத் நுஃமானிக்கு எதிராக போடப்பட்ட FIR கண்டிப்பாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பொய் வழக்கை திரும்பப்பெறக்கோரி தேசிய தலைநகரில், உ.பி. பவன் நோக்கிய பேரணி நடைபெற்றது. பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு இரவு வரை காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

கர்நாடகாவில் குந்தாபுரா, சாம்ராஜ் நகர், தவாங்கரி, ராம் நகர், பெங்களூர், கஞ்சாவதி கோப்பல், ஹுப்ளி, யத்கிர்ஷாபூர், ஜம்கந்தி, பிஜாப்பூர், குல்பர்கா, சிந்தகி, மகாளிங்கபூர் பாகல்கோட், முதோல் மற்றும் பாகல்கோட் போன்ற பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ராஜஸ்தானில் கோட்டா, உதைப்பூர், சிட்டோட் கர், அஜ்மீர், பரன் மற்றும் பில்வாரா ஆகிய இடங்களில் தர்ணா நடைபெற்றன. மாவட்ட ஆட்சியர் மூலமாக குறிப்பானை (Memorandum) சமர்பிக்கப்பட்டது. பீகாரில் முஸாஃபர்பூர், வைசாலி, தர்பங்கா, ஜமோய், அராரிய மற்றும் பூர்னியா போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். லக்னோ மற்றும் மீரட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் BMM-ன் தலைவர்கள் பொதுமக்களுக்கு மத்தியில் உரையாற்றினர். ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூரில் பல்வேறு முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றுசேர்ந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மகாராஷ்டிராவில் மாநிலம் தழுவிய அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட், பாரத் முக்தி மோச்சாவுடைய தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்த உலமாக்கள் மற்றும் ஆலிம்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மத்தியில் உரையாற்றினர். மும்பை, பூனே, நந்தித், அவுரங்காபாத், ஜல்னா, பர்பானி, கராத், பீவண்டி மற்றும் பீட் ஆகிய இடங்களில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. மௌலான சஜ்ஜாத் நுஃமானி மீதான அரசியல் வேட்டையை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மற்ற மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

பாரத் முக்தி மோச்சா மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒன்றுசேர்ந்து பல்வேறு மாநிலங்களில் நடத்திய இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் தனது தலைவர்கள் மற்றும் அறிஞர்களை அச்சுறுத்தும் எந்தவொரு முயற்சியையும் தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் ஒன்றுசேர்ந்து எதிர்ப்பார்கள் என்ற தகவலை தெரிவித்துள்ளது.

இப்படிக்கு
டாக்டர். முஹம்மது ஷம்மூன்,
தலைவர், மக்கள் தொடர்பு,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

Comments are closed.