ம.க.இ.க வின் வீதி நாடக கலைஞன் கோவன் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது – பாப்புலர் ஃப்ரண்ட்-ன் மாநில தலைவர் கண்டனம்

0

 

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ம.க.இ.க வின் வீதி நாடக கலைஞர் கோவன் கைது செய்திருப்பதை கருத்துரிமையை முடக்கும் ஜனநாயக விரோத செயல் என்றும் அவரை உடனே விடுவிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு தனது கண்டனத்தை பாப்புலர் ஃப்ரண்ட்-ன் மாநில தலைவர் எம்.முகம்மது இஸ்மாயீல் பதிய வைத்தார். அவர் தனது கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“தமிழக அரசின் மக்கள் விரோத கொள்கையான மதுவினால் ஏற்படும் தீமைகளையும், சமூக அவலங்களையும் பாடல்கள் மூலமாக மக்கள் மன்றத்தில் பிரச்சாரம் செய்து வந்த மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகரும், வீதி நாடக கலைஞருமான கோவன் திருச்சியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது  கருத்துரிமையை முடக்கும் செயலாகும்.

தமிழகத்தில் ஜனநாயக அடிப்படையில் நடக்கும் அறப்போராட்டங்கள் காவல்துறையினரால் சட்ட விரோதமாக ஒடுக்கப்படுவது தொடர் கதையாகி வரும் சூழ்நிலையில், சுதந்திரமாக தனது கருத்தை பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியதற்காக கோவன் அவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ்செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும்.

இத்தகைய ஜனநாயக விரோத செயலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாமாக கண்டிப்பதோடு, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கோவன் அவர்களை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், இது போன்ற  ஜனநாயக விரோத போக்கை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

Comments are closed.