யாகூப் மேமனுக்கு தவறான தீர்ப்பு அதிருப்தியில் உச்சநீதிமன்ற சார்பு ஆய்வாளர் ராஜினாமா

0

புதுடெல்லி, 02, ஆகஸ்ட் 2016: யாகூப் மேமன் வழக்கில் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து அந்த வழக்கின் உச்ச நீதிமன்ற மூத்த அலுவலரான அனுப் சுரேந்திரநாத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

முன்னதாக அவர் தீர்ப்பு வெளியான அன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்திருந்தார்

” நான் பல்வேறு காரணங்களால் இந்த முடிவு குறித்து ஒரு கணம் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன் ஆனாலும் கடந்த ஒரு வாரமாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருப்பதுதான் எனது கடைசி புள்ளியாக வந்து முடிவடைகிறது” எனவே என்னுடைய உச்ச நீதிமன்ற பணியை ராஜினாமா செய்கிறேன். என்று தெரிவித்திருந்தார்.

பேராசிரியர் அனுப் சுரேந்திரநாத் தேசிய சட்டப்பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருப்பவர். அவர் தான் கடைசியாக யாக்கூப் மேமன் விவகாரத்தில் நடந்த சம்பவங்களை புத்தகமாக எழுதப்போவதாக தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய இந்த முடிவு பல வழிகளில் தனக்கு சாதகமாக இருக்கும் எனவும் கடந்த ஒரு வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற சம்பவங்களை சுதந்திரமாக எழுத என்னை விடுவித்துக்கொள்ள வரும் நாட்கள் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

ஜூலை 30 அன்று காலை நாக்பூர் சிறைச்சாலையில் யாக்கூப் மேமன் தூக்கிலிடப்பட்ட சில நிமிடங்களில் அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதும்போது.

” சட்டத்தில் உள்ள விதிமுறைகளின் பெயரால் இந்த 24 மணி நேரத்தில் நடந்தவை அனைத்தும் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளாகும். ஜூலை 29 மாலை 4 மணி மற்றும் ஜூலை 30 காலை 5 மணிக்கும் வெளியிடப்பட்ட இரண்டு ஆணைகளும் நீதிமன்றம் தனது பொறுப்பை கைவிட்டதை காட்டுகிறது. இது நிச்சயமாக இந்திய நீதித்துறை வரலாற்றின் கருப்பு பக்கங்களாக பதிவு செய்யப்பட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

பேராசிரியர் அனுப் சுரேந்திரநாத் கடந்த வருடம் மே மாதம் முதல் உச்ச நீதிமன்றத்தில் சார்பு பதிவாளராக பணியாற்றி வந்தார்.

Comments are closed.