யார் இந்த தேவதை?

0

யார் இந்த தேவதை?

அன்று ஞாயிற்றுக்கிழமை. மதிய நேரம். தம் அறையில் ஓய்வாகச் சாய்ந்து, புத்தகம் படித்துக்கொண்டிருந்தார் முஸ்தஃபா. அடுத்த அறையில் டிவி ஓடிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் கரீமும் ஸாலிஹாவும் ‘அத்தா, அத்தா’ என்று கத்திக்கொண்டே உள்ளே ஓடி வந்தார்கள்.

‘எனக்கொரு டவுட்’ என்றாள் ஸாலிஹா.

புத்தகத்தை மூடி வைத்துவிட்டு உயர்ந்த புருவங்களுடன் அவர்களைப் பார்த்தார் முஸ்தஃபா. ‘அத்தா. ஆண் தேவதை இருக்கிறார் தானே?’

‘தேவதை பெண் தானே அத்தா? எங்க ஸ்கூல் டிராமாவில் பார்த்திருக்கிறேன். தலையில் கிரவுன், வெள்ளையா நீளமா டிரஸ், கையில் ஒரு ஸ்டிக். தேவதை அப்படித்தானே அத்தா இருக்கும்’ என்றான் கரீம்.

பெரிதாய் மூச்சுவிட்டு, பிள்ளைகளைப் பார்த்தார் முஸ்தஃபா. சிறிது யோசனைக்குப்பின் கேட்டார். ‘தேவதை என்றால் இங்கிலீஷில் என்ன?’

‘ஏஞ்சல்’ என்றாள் ஸாலிஹா.

‘கரெக்ட். நாம பொதுவா டிவியில், சினிமாவில் பார்க்கும், புக்ஸில் படிக்கும் தேவதைகள், ஏஞ்சல்களெல்லாம் கரீம் சொன்னதைப் போல்தான் இருப்பார்கள். ஏனென்றால் முஸ்லிம் அல்லாதவர்கள் பெண் கடவுள்களைத் தேவதைகளாகப் பார்க்கிறார்கள். அதனால் அழகான பெண்களை, பெண் குழந்தைகளை தேவதை என்று சொல்கிறார்கள், கொஞ்சுகிறார்கள்.’

‘அப்ப முஸ்லிம்ஸுக்கு ஏஞ்சல் இல்லையா? ஆண் தேவதையும் இல்லையா?’ என்று கேட்டாள் ஸாலிஹா. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.