யார் ஊமை

0

-இப்னு ஜஹபர்

இன்றிலிருந்து சுமார் 5 ஆண்டுகள் பின்னோக்கி பயணிப்போம். 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகிக் கொண்டிருந்த நேரம் அது. 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த காங்கிரஸை அகற்றி ஆட்சியை கைப்பற்றி காவி விதையை நாடெங்கும் தூவ துடித்துக்கொண்டிருந்தது பா.ஜ.க. அப்போதே அத்வானியை ஒதுக்கிவிட்டு, அன்றைய குஜராத் முதலமைச்சராக இருந்த மோடியை பிரதமர் முகமாக அடையாளப்படுத்த ஆரம்பித்திருந்தது அக்கட்சி. தங்களின் வழக்கமான வாக்குறுதிகளான ராமர் கோவில், இந்து ராஷ்டிரா, தீவிரவாத ஒழிப்பு போன்றவற்றை ஒரு பக்கம் பா.ஜ.க. சொல்லி வந்தாலும், தேர்தலில் வெற்றி பெற அவர்கள் எடுத்த முக்கிய அஸ்திரம் ஊழல் ஒழிப்பும், அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் மவுனமாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும்தான்.

மீம்ஸ்கள், சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கிய அந்த காலக்கட்டத்தில் பா.ஜ.க. தங்கள் ஐடி விங்குகளை வைத்து மன்மோகன் சிங்கின் அமைதியை பலவாறு விமர்சித்தது. இது அவர்களின் தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது எனலாம். பா.ஜ.க.வின் இந்த பிரச்சாரத்தால் மன்மோகன் சிங்கின் ஏனைய அனைத்து குணநலன்களும் செயல்பாடுகளும் புறந்தள்ளப்பட்டு அவர் ஒரு ஊமை என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டது. ‘பேசாத பிரதமர் நமக்கு தேவையில்லை’ என்ற பிரச்சாரம் முன்வைக்கப்பட்டது.

நிற்க…

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.