யார் தடுத்தாலும் எட்டு வழி சாலை நிறைவேற்றப்படும்- பொன்னார்

0
தமிழகத்தில் 8 வழிச்சாலைக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ள நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதில்லை என்றும், தீர்ப்பை அமல்படுத்த ஒத்துழைக்க போவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசினார். ஆனால் மத்திய அமைச்சர்  நிதின் கட்கரி 8 வழி சாலையை அமல்படுத்துவோம் என்றார்.
மேலும் இதைதொடர்ந்து, எட்டு வழிச்சாலை அமைப்பதை யார் தடுத்தாலும், அந்த திட்டம் நிறைவேற்றப்படும் என கன்னியாகுமரி மக்களவை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பிரச்சரத்தின் போது பேசிய அவர், சிலரின் தூண்டுதலால் இந்த திட்டத்தை மக்கள் எதிர்கின்றனர் என்றார்.

Comments are closed.