யூதர்கள் இந்திய

0

யூதர்கள் இந்திய

குஜராத் யூதர்களுக்கு அம்மாநில அரசு சிறுபான்மை அந்தஸ்து வழங்கியது குறித்து கடந்த 2018 டிசம்பர் 16-31 இதழில் பார்த்தோம்.

இந்தியாவிற்கு யூதர்களின் வருகை, இங்குள்ள 8 வகையான யூதர்களில் கொச்சி யூதர்கள் அல்லது பரதேசி யூதர்கள், மலபார் யூதர்கள் மற்றும் பனீ இஸ்ராயீல் யூதர்கள் குறித்து 2019 பிப்ரவரி 16-&28 பார்த்தோம். இவ்விதழில் அதன் தொடர்ச்சியை பார்ப்போம்.

பனீ இஸ்ராயீல் யூதர்கள்

இவர்கள் மராத்தி மற்றும் இந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்கள். இவர்களிடையும் நிறப் பாகுபாடு கடுமையாகக் காணப்படுகிறது. யூத தாய்க்கும், யூத தந்தைக்கும் பிறந்தவர்கள் வெள்ளை இன யூதர்கள், அதாவது “கோரா” (நிஷீக்ஷீணீ) என தங்களை அழைத்துக் கொள்கின்றனர். அதே சமயம் யூத தந்தைக்கும் வேறு சமூகத்தைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர்கள் கருப்பின யூதர்கள், அதாவது “காலா” (ரிணீறீணீ) என அழைக்கப்படுகின்றனர்.

கோரா யூதர்கள் தங்களை உயர் குலத்தினர் என்று பறைசாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் காலா யூதர்களுடன் கலந்து பழகுவது கிடையாது.  மேலும், அவர்களுடன் திருமண உறவும் வைத்துக் கொள்வதில்லை.

1950ம் ஆண்டு மும்பையில் இஸ்ரேலிய தூதரகம் அமைக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் அங்கிருந்த பனீ இஸ்ராயீல் யூதர்களின் வலுவான செல்வாக்கு மற்றும் ஆதிக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்தாத் யூதர்கள்

மேற்கு ஆசியாவிலிருந்து, குறிப்பாக ஈராக், ஈரான், ஆஃப்கானிஸ்தான், சிரியா, யெமன் மற்றும் பிற அரபு நாடுகளிலிருந்து  வியாபாரிகளாகவும், அகதிகளாகவும் 19ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்தவர்கள் பாக்தாத் யூதர்கள் என அழைக்கப்படுகின்றனர். 280 வருடங்களுக்கு முன்பு இவர்கள் இங்கே வந்ததாகவும் சொல்லப்படுகின்றது. இவர்கள் மிஸ்ராச்சி யூதர்கள், அதாவது கிழக்குப் பகுதி யூதர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மேற்குக் கடலோரத்தின் முக்கியத் துறைமுக நகரான குஜராத்தில் உள்ள சூரத்திற்கு முதலில் வந்தனர். அதன் பிறகு இவர்கள் மும்பை, கொல்கத்தா மற்றும் பூனாவில் குடியேறினர். இந்தியாவின் அண்டை நாடான மியான்மரிலும் குடியேறினர். … <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.