யெமனின் துயரங்களுக்கு யார் காரணம்?

0

யெமனின் துயரங்களுக்கு யார் காரணம்?

வளைகுடா நாடுகளில் அதிகம் கண்டுகொள்ளப்படாத, வறுமையில் வாடும் மக்களை அதிகமாகக் கொண்ட நாடு யெமன். வளைகுடா நாடுகள் அங்கம் வகிக்கும் வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பில் (Gulf Cooperation Council GCC) யெமனிற்கு அங்கத்துவம் அளிக்கப்படுவதில்லை. சவூதியின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள இந்நாடு தற்போது நிம்மதியை இழந்து தவித்து வருகிறது.

மார்ச் 26, 2015 அன்று சவூதி படைகள் யெமன் தேசத்தில் தாக்குதலை ஆரம்பித்தன. நான்காவது ஆண்டை எட்டியுள்ள இந்த பிரச்சனை இனி வரும் நாட்களில் இன்னும் மோசமாகத்தான் செல்லும் என்று யெமன் விவகாரத்தை கவனித்து வருபவர்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர். சிரியா அளவிற்கு யெமனின் அவலங்கள் உலக மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.  யெமனின் தற்போதைய பிரதமர் அப்துர் ரப் ஹாதி மன்சூருக்கு சவூதி ஆதரவு அளித்து வருகிறது. முன்னாள் ஏடன் ஆளுநர் ஐத்ரூஸ் அல் சுபைதியின் சதர்ன் ட்ரான்சிசினல் கவுன்சிலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஒத்துழைப்புகளை நல்கி வருகிறது. ஷிஆகளின் ஸெய்தி பிரிவின் ஒரு கிளையான ஹூத்திகளின் கீழ் தலைநகர் சனா உள்ளது. இவர்களுக்கு ஈரான் ஆதரவளிக்கிறது. சவூதியும் அமீரகமும் ஹூத்திகளை எதிர்க்கின்றனர். ஆனால் சென்ற மாத இறுதியில் இவர்கள் இருவரின் ஆதரவு பெற்ற குழுக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டன. இவை தவிர, அல் காய்தா, ஐ.எஸ்., பழங்குடியின குழுக்கள் ஆகியவையும் தங்கள் பங்கிற்கு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு மத்தியில் யெமன்வாசிகள் சிக்கித் தவிக்கின்றனர். 2011 அரபுலக வசந்தத்தை தொடர்ந்து அதிபர் அலி அப்துல்லாஹ் சாலிஹ்கிற்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தினர். சாலிஹ் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கவில்லை.

…முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.