யோகாவை பள்ளிகளில் கட்டாயமாக்க மனு: தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

0

யோகாவிற்கு என தேசிய கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்றும் அனைத்து பள்ளிகளிலும் யோகாவை கட்டாயமாக்க வேண்டும் என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நீதிபதி M.B.லோகுர் தலைமையிலான உச்ச நீதிமன்ற பென்ச் இது போன்ற விஷயங்களில் முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு அரசிற்கு தான் உள்ளது என்று கூறியுள்ளது. “பள்ளிகளில் என்ன கற்பிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் எப்படி கூற முடியும். அது எங்களுடைய வேலையில்லை. இந்த உத்தரவை நாங்கள் எப்படி பிறப்பிக்க முடியும்?.” என்று அந்த பென்ச் கூறியுள்ளது.

டில்லி பாஜக செய்தித் தொடர்பாளர் J.C.சேத் மற்றும் அஷ்வினி குமார் உபாத்யாய் என்ற வழக்கறிஞர் விண்ணப்பித்த இந்த மனுவிற்கு பதிலளிக்கையில், “பள்ளிகளில் என்ன கற்றுக் கொடுக்கப்படுகிறதோ அது அடிப்படை உரிமை அல்ல.” என்று நீதிமன்ற பென்ச் கூறியுள்ளது.

1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு யோகா மற்றும் ஆரோக்கிய கல்வி குறித்து முறையான பாட புத்தகத்தை வழங்க மத்திய மனிதவள அமைச்சகம், NCERT, NCTE மற்றும் CBSE ஆகியவற்றிற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று உபாத்யாய் தனது மனுவில் கூறியுள்ளார். இந்த உத்தரவு வவாழ்வதற்கான உரிமை, கல்வி மற்றும் சமத்துவ அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் தனது மனுவில், குடிமக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது ஒரு நாட்டின் மீதான கடமை என்றும் யோகா மற்றும் ஆரோகியதிர்கான கல்வி வழங்கப்படாமல் இது சாத்தியமில்லை என்றும் அதனால் தேசிய யோகா கொள்கை ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் நவம்பர் 29 ஆம் தேதி இந்த மனுவை கருத்தில் கொண்டு இது தொடர்பான ஒரு முடிவெடுக்க நீதிமன்றம் மத்திய அரசிற்கு அறிவுரை வழங்கியது.

Comments are closed.