யோகா சரிவர செய்யாததால் மாணவர்களை கடுமையாக தாக்கிய ஆசிரியை

0

தெலுங்கான மாநிலத்தில் உள்ள அதிலாபாத் மாவட்டத்தின் மன்செரியல் பகுதியில் உள்ளது சிங்கராணி உயர்நிலைப்பள்ளி. இப்பழியில் பயின்று வரும் 10 ஆம் வகுப்பு மாணவ மாணவியர் 10 பேரை அவர்கள் சரியாக யோகா பயிலவில்லை என்று கூறி யோகா ஆசிரியை ஜான்சி கடுமையாக தாக்கியுள்ளார்.

இவர் யோகா பயிற்சிக்காக 10 வகுப்பு மாணவர்களை ஒன்று திரட்டியுள்ளார். அப்போது சில மாணவர்கள் யோகா பயிற்சியினை சரியாக செய்யாத காரணத்தினால் அவர்களை கைகளிலும் காலிலும் பிரம்பினால் கடுமையாக தாக்கியுள்ளார்.

ஆசிரியையால் தண்டிக்கப்பட்ட மாணவர்கள் மறுநாள் நடக்க முடியாத அளவிற்கு வேதனையில் துடித்துள்ளனர். அவர்கள் பின்னர் அப்பகுதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரான துரகம் பாபு என்பவரது பெற்றோர் இதனை பள்ளி பெற்றோர் கழகத்திடம் எடுத்துச் சென்றுள்ளனர்.

கடந்த திங்கள் அன்று இப்பள்ளியின் பெற்றோர் கழகம் பள்ளி நிர்வாகத்திற்கு அந்த ஆசிரியை மேல் நடவடிக்கை எடுக்குமாறு புகாரளித்துள்ளது. மேலும் இது குறித்த புகார் ஒன்று காவல் நிலையத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறையினர் இந்த பிரச்னையை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து வைக்க முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Comments are closed.