யோகா செய்ய விருப்பம் இல்லாதவர்கள் இந்தியாவை விட்டு செல்லலாம்: யோகி ஆதித்யநாத்

1

‘யோகா செய்ய விருப்பம் இல்லாதவர்கள் இந்தியாவை விட்டும் செல்லலாம்’ என்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படுவதை தொடர்ந்து மத்திய அரசாங்கம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மக்கள் நிர்ப்பந்தம் செய்யப்படுவதாக தற்போதே குற்றச்சாட்டுகள் எழ ஆரம்பித்துள்ளன. யோகாவின் ஒரு பகுதியான சூரிய நமஸ்காரம் இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் அதனை முஸ்லிம்கள் மீது திணிக்கக் கூடாது என்றும் முஸ்லிம்கள் கோரி வருகின்றனர்.
யோகாவிற்கு மத சாயத்தை பூசும் வகையில் மத்திய அரசாங்கம் செயல்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே வாரணாசியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கோரக்பூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் யோகி ஆதித்யநாத் “யோகாவை ஆரம்பித்த கடவுள் சங்கர் ஒரு மிகச் சிறந்த யோகி. அவர் நாட்டில் உள்ள அனைத்து பொருட்களிலும் வாழ்ந்து வருகிறார். எனவே, யோகாவையும் கடவுள் சங்கரையும் ஒதுக்க நினைப்பவர்கள் இந்துஸ்தானை விட்டும் செல்லலாம்” என்று கூறினார்.
மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் யோகி ஆதித்யநாத், சாக்ஷி மஹாராஜ் போன்றோர் தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Discussion1 Comment

  1. mohammed jakkariya

    kurangu kaiyil poomalai idhugal idhaithan seyyum poruthukonduthan agavendum ivarkalukkana punishment nichayam undu