யோகி ஆதித்யநாத்தின் ‘மோடி ராணுவம்’ என்ற சர்ச்சை கருத்து: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

0

அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடும் போது பாதுகாப்பு படைகளின் செயல்களை கூறி வாக்கு சேகரிக்கக் கூடாது என கடந்த மார்ச் 19-ம் தேதி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதன் தொடர்பாக கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற்ற பொது கூட்டத்தில் அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசினார். அப்போது அவர் “ பயங்கரவாதிகளுக்கு காங்கிரஸ் பிரியாணி ஊட்டி விடும். ஆனால் மோடியுடைய ராணுவம் பயங்கரவாதிகளுக்கு புல்லட்களையும், வெடி பொருட்களையும் வழங்கும் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பேசிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக அவர் ஏப்ரல் 5ஆம் தேதி நாளைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

Comments are closed.