யோகி ஆதியநாத் பற்றி கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர் கைது: விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு!

0

உததிரப் பிரதேச முதல்வர் அலுவலகத்துக்கு வெளியே ஒரு பெண், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தை அவருக்கு அனுப்பியதாக செய்தியார்களிடம் பேட்டி கொடுத்துள்ளார். இந்த பேட்டியின் வீடியோ காட்சியை நொய்டாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் பிரசாந்த் கனோஜியா டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

அதன் பிறகு முதல்வர் யோகி குறித்து அவதூறு செய்தி பரப்பியதாக பிரசார்ட்ம்ந்தத\ந்த் கனோஜியா மீது காவல் நிலையத்தில் மூன்று நாட்களுக்கு முன்னர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கனோஜியாவின்  கைதுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. மேலும் இதனிடையே கைது செய்யப்பட்ட கனோஜியாவின் மனைவி ஜகீஷா அரோரா தனது மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இதனை நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி, ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கைதான பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை உடனடியாக விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்திரிகையாளர் கைதுக்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது. அத்துடன் உத்தரப் பிரதேச அரசை நீதிபதிகள் விளாசினர்.

“எந்த அடிப்படையில் பத்திரிகையாளரை கைது செய்தீர்கள் ? கைது செய்ததை சரியானதாக கருதுகிறீர்களா ? கொலைக்குற்றம் செய்துவிட்டாரா ? அவதூறு வழக்கிற்கக நீதிமன்ற காவலில் வைக்க அவசியம் என்ன ? லக்னோ மாஜிஸ்திரேட் தவறான உத்தரவை பிறப்பித்துள்ளார். ஒவ்வொரு தனிநபருக்கும் தனது கருத்தை சுதந்திரமாக தெரிவிக்க உரிமையுள்ளது. சில நேரங்களில் சில விஷயங்கள் தவிர்க்கப்பட வேண்டியவைதான். அதற்காக கைது செய்வீர்களா ? எதற்கெடுத்தாலும் கைது நடவடிக்கை எடுப்பீர்களா ?” என்று கேள்விகளை என உத்தரப் பிரதேச அரசை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக சாடினர்.

பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை விடுதலை செய்வதற்கு உத்திரபிரதேச அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அவரை விடுதலை செய்தால் சமூக வலைதளங்களில் அவர் பரப்பிய கருத்து உண்மை என்று விளங்கி விடும் என்று உச்சநீதிமன்றத்தில் உ.பி. அரசு வாதிட்டது. இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, செய்தியாளர்களை எந்த சட்டப்படி உ.பி. அரசு கைது செய்தது என்று கேள்வி எழுப்பினார்.

கருத்து வேறுபடலாம் ஆனால் அதற்காக கைது செய்வது ஏன் என்று உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. விடுதலை செய்தால் பிரசாந்தின் கருத்து எப்படி உண்மையாகும் என்றும் அது அவரது தனிப்பட்ட கருத்தாகவே இருக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கருத்து தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது என்றும், எதற்கெடுத்தாரலும் கைது செய்வீர்களா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Comments are closed.