“ரஃபேல் ஆவணங்கள் மீது விசாரணை நடத்தப்படும்” மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு

0

ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் அதை விசாரிக்க வேண்டுமென்றும் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் கடந்த டிசம்பர் ‌மாதம், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

அதில் ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் எந்த தவறும், முறைகேடுகளும் நடக்கவில்லை என உச்ச‌நீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியிருந்தது. இதனையடுத்து மத்திய அரசு ரஃபேல் வழக்கில் பல தகவல்களை மறைத்துள்ளதால், தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் விசாரணையை நடத்தியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்கே. கவுல், கே எம் ஜோசப் ஆகியோர் இதனை விசாரித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் ரஃபேல் ஆவணங்கள் மீதான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சட்டவிரோதமாக பெறப்பட்ட ஆவணங்கள் மீது விசாரணை நடத்தக் கூடாது என மத்திய அரசு வைத்த கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்து உள்ளனர். மேலும் ‘தி ஹிந்து’செய்தித் தாளில் வெளியான ஆவணங்களும் விசாரணையின் போது எடுத்துகொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply