ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த தகவல்களை தெரிவிக்க முடியாது: பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்

0

பிரான்ஸ் நாட்டின் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து எந்த ஒரு தகவலையும் அந்நாட்டுடன் போடப்பட்ட ரகசிய ஒப்பந்தத்தின் காரணமாக பாராளுமன்றத்தில் வெளியிட முடியாது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர், இந்த ஒப்பந்தத்தின் அடிபப்டையில் பெறப்பட்ட விமானங்களில் ஒரு விமானத்திற்கு எவ்வளவு விலை கொடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்களை  Inter-Governmental Agreement (IGA) வின் பிரிவு 10  இன் அடிப்படையில் வெளியிட முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் விமானங்களை மிக அதிக தொகை கொடுத்து பாஜக பெற்றுள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்தில் அணில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பாஜக அரசு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த குற்றச்சாட்டை பாஜக மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்துள்ளன.

பத்திரிகைகளில் வெளியான தகவல்களின் அடிப்படையில், ஃபிரான்ஸ் நாட்டுடன் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் ஃபிரஞ்சு விமானங்களை விட விமானம் ஒன்றிக்கு 59 மில்லியன் யூரோ விலை குறைவாக கிடைத்த மற்றொரு ஐரோப்பிய போர் விமான ஒப்பந்தத்தை பாஜக நிராகரித்துவிட்டது என்று கூறப்படுகிறது.

யூரோ ஃபைட்டர் டைபூன் என்ற அந்த போர் விமானத்தை 126 விமானங்களுக்கு 17.5 பில்லியன் யூரோ என்ற விலை பேசப்பட்ட நிலையில், தற்போது வெறும் 36 போர் விமானங்களை 7.1 பில்லியன் யூரோவிற்கு வாங்க பாஜக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது என்று தெரியவந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் விமானம் ஒன்று 197 மில்லியன் யூரோவிற்கு வாங்கப்படுகிறது. யூரோ ஃபைட்டர் டைபூன் விமானம் ஒன்றன் விலை 138 மில்லயன் யூரோ ஆகும்.

பாஜக தற்போது வாங்கியுள்ள ரஃபேல் போர் விமாங்களின் விலையில் இருந்து போக்குவரத்து மற்றும் ஐந்து வருடத்திற்கான பராமரிப்பு செலவுகளை கழித்தாலும் கூட விமானம் ஒன்றின் விலை 187 மில்லியன் யூரோக்கள் என்று கணக்கிடப்படுகிறது.

இந்தியாவில் தாயரிக்கப்படும் தேஜஸ் விமான உற்பத்தியில் ஏற்படும் தாமத்ததாலும் தற்போது விமானப்படையில் பணியில் உள்ள ரஷ்ய போர் விமானங்களின் நம்பகத்தன்மையற்ற நிலையாலும் தற்போதைய இந்த புதிய போர்விமானங்களின் அறிமுகம் இந்திய விமானப்படைக்கு மிகவும் அத்தியாவசமானது என்று கருதப்படுகிறது.

Comments are closed.