ரஃபேல் விவகாரம்: மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

0

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக ஆதாரமற்ற செய்திகளின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள கூடாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு எனவும் ரத்து செய்யக் கோரியும் தொடரப்பட்ட வழக்குகளை கடந்த ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதற்கு எதிராக பிரசாந்த் பூஷண், அருண்ஷோரி, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்நிலையில் மத்திய அரசு தரப்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி உத்தரவில் ரஃபேல் ஒப்பந்தம் மிகச்சரியானது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஃபேல் தொடர்பான சில பகுதி விவரங்களை மட்டுமே மாற்றம் செய்யப்பட்டு, திட்டமிட்டுப் பரப்பப்படும் ஆதாரமற்ற செய்திகளின் அடிப்படையில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்கைய சீராய்வு மனுக்கள் விசாரணைக்கு ஏற்றதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.